என் மலர்
நீங்கள் தேடியது "பிச்சைக்காரன்"
- ‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார்.
- இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனிக்கு கதாநாயகனாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்த படம் 'பிச்சைக்காரன்'. இயக்குநர் சசி இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலையும் குவித்தது.
'பிச்சைக்காரன்' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் இயக்குநர் சசியுடன் மீண்டும் இணையவில்லை. இவர்களின் கூட்டணி மீண்டும் இணையுமா? என எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்த நிலையில், இயக்குநர் சசியுடன் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளார். இருவரும் இணைந்துள்ள இப்படத்திற்கு 'நூறு சாமி' என தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிப்பில் இப்படம் அடுத்தாண்டு மே மாதம் 1-ந்தேதி வெளியாக உள்ளது.
படத்தின் தலைப்பிற்கு ஏற்ப கதைகளும் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
- 'பிச்சைக்காரன் 3' படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும்.
- முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் மூன்றாம் பாகம் இருக்கும்.
விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்தும் இயக்கியும் வெளியான படம் 'பிச்சைக்காரன் 2'. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், வசூலையும் குவித்தது.
இதனை தொடர்ந்து 'பிச்சைக்காரன் 3' படம் உருவாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேல் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் 'பிச்சைக்காரன் 3' குறித்த அறிவிப்புக்காக காத்திருந்தனர்.
இந்த நிலையில், 2027-ம் ஆண்டு கோடை விடுமுறையில் 'பிச்கைக்காரன் 3' வெளியாகும் என்று விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற 'மார்கன்' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆண்டனியிடம் 'பிச்சைக்காரன் 3' குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு விஜய் ஆண்டனி கூறுகையில், 'பிச்சைக்காரன் 3' படத்தின் கதையினை இப்போது கூட என்னால் சொல்ல முடியும். முதல் பாகம் மற்றும் 2-ம் பாகத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் வித்தியாசமாகவும் மூன்றாம் பாகம் இருக்கும். விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும். 2027-ம் ஆண்டு கோடையில் 'பிச்சைக்காரன் 3' படம் வெளியாகும் என தெரிவித்தார்.
- விஜய் ஆண்டனி தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
- இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

பிச்சைக்காரன் -2 படக்குழு
இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிச்சைக்காரன் -2 போஸ்டர்
இந்நிலையில், விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
#ANTIBIKILI 👺#Pichaikkaran2 #Bichagadu2 #Bhikshuka2 #Bhikshakkaran2
— vijayantony (@vijayantony) December 20, 2022
Satellite & Digital rights acquired by Star Network 🔴
Summer 2023 🔥@vijaytelevision @StarMaa @asianet @StarSuvarna @DisneyPlusHS @mrsvijayantony @vijayantonyfilm @DoneChannel1 @gskmedia_pr @gobeatroute pic.twitter.com/w0YPShC1xy
- விஜய் ஆண்டனி இயக்கத்தில் 'பிச்சைக்காரன் -2' உருவாகி வருகிறது.
- இப்படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலேசியாவில் 'பிச்சைக்காரன் 2' படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி நடித்தபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்த தகவல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்குள்ள லங்கா தீவில் கடலில் படகை விஜய் ஆண்டனி வேகமாக ஓட்டி சென்றபோது இன்னொரு படகில் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனிக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு வாய்ப்பகுதி சேதம் அடைந்து பற்கள் உடைந்தன.

விஜய் ஆண்டனி
சுய நினைவிழந்து தண்ணீருக்குள் மூழ்க போன விஜய் ஆண்டனியை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது உடல்நிலை தேறி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் வாய்ப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

விஜய் ஆண்டனி
சென்னை சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதாக விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார். இதையடுத்து விஜய் ஆண்டனி இன்று (புதன்கிழமை) லங்கா தீவில் இருந்து விமானத்தில் கோலாலம்பூர் சென்று அங்கிருந்து இரவு சென்னை திரும்ப இருக்கிறார். சென்னையில் பிரபல மருத்துவமனையில் விஜய் ஆண்டனி அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
- விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
- இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கினார். பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது.
- பிச்சை எடுத்த பணத்தில் ஐபோன் வாங்கியதாக பிச்சைக்காரர் தெரிவித்தார்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பிச்சைக்காரர் ஒருவர் ரூ.1.44 லட்சம் மதிப்புள்ள ஐபோன் 16 ஐ வாங்கியதாக கூறும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆப்பிள் நுண்ணறிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தான் சந்தையில் விற்பனைக்கு வந்தது. இந்நிலையில், பிச்சை எடுக்கும் மாற்றுத்திறனாளி ஒருவர் தனது கையில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வைத்திருப்பதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் பேசிய பிச்சைக்காரர், "இந்த ஐபோன் 16 ஐ நான் மொத்தமாக ரொக்கப்பணம் கொடுத்து வாங்கினேன்" என்று தெரிவித்தார்.
மேலும், அந்த வீடியோவில், 'ஒருவர் பிச்சைக்காரரிடம் எப்படி இந்த ஐபோனை வாங்குவதற்கு பணம் எப்படி கிடைத்தது என்று கேட்டதற்கு அவர் பிச்சை எடுத்ததில் கிடைத்தது' என்று தெரிவித்தார்.
அதே சமயம் இந்த வீடியோ போலியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஒருதரப்பினர் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.






