பிச்சைக்காரர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கிய விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிச்சைக்காரர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கிய விஜய் ஆண்டனி
Published on

விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு செருப்பு, போர்வை, பிளாஸ்டிக் விசிறி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஆண்டி பிகிலி கிட்டை வழங்கினார். பின்னர் அவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com