search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிச்சைக்காரன் -2 படத்தின் புதிய அப்டேட்
    X
    விஜய் ஆண்டனி

    பிச்சைக்காரன் -2 படத்தின் புதிய அப்டேட்

    • விஜய் ஆண்டனி தற்போது நடித்து இயக்கி வரும் திரைப்படம் ‘பிச்சைக்காரன் -2’.
    • இப்படத்தின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் 'பிச்சைக்காரன்'. கடந்த 2016-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு, விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.


    பிச்சைக்காரன் -2 படக்குழு

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்கியும் வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    பிச்சைக்காரன் -2 போஸ்டர்

    இந்நிலையில், விஜய் ஆண்டனி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'பிச்சைக்காரன் -2' திரைப்படம் 2023-ஆம் ஆண்டு கோடையில் வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும்'பிச்சைக்காரன் -2' திரைப்படம் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவுள்ளது. இதன் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×