என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். #Thalapathy63 #Vijay
    பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து அட்லி ‘தளபதி 63’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தளபதி 63 படத்தின் கதை என்னுடையது என்று குறும்பட இயக்குனர் கே.பி.செல்வா எழுத்தாளர் சங்கத்தை அணுகியுள்ளார். இது குறித்து செல்வா தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில், ‘பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து நான் 265 பக்கங்கள் கொண்ட கதையை எழுதினேன். அந்த கதையை சில தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தேன். இந்நிலையில் அட்லி இந்த கதையை இயக்கும் செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து நான் நீதிமன்றத்திற்கு சென்றேன். ஆனால் அவர்களோ எழுத்தாளர்கள் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்தனர்.

    பின்னர் அட்லி தரப்பில் என்னை தொடர்புகொண்டு கதை விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம், உங்களின் படத்தை கைவிட்டுவிடுங்கள் என்றார்கள். அதன் பிறகு கதை திருட்டு தொடர்பாக தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன்.



    சங்க விதிப்படி உறுப்பினராகி 6 மாதம் கழித்த பிறகே கதை திருட்டு குறித்து புகார் அளிக்க முடியும் என்று கூறிவிட்டார்கள். அது தொடர்பாக கடிதமும் அளித்தார்கள்.

    எழுத்தாளர் சங்கத்தில் புகாரை ஏற்க மறுத்த பிறகு நான் மீண்டும் நீதிமன்றம் சென்றுள்ளேன். கதை திருட்டு குறித்த வழக்கு வரும் 23ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஏ.ஜி.எஸ். நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது என்றார் செல்வா.
    தற்போது காஞ்சனா 3 படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்திருக்கும் வேதிகா, இணைய தொடரில் நடிக்க நிபந்தனை போட்டிருக்கிறார். #Vedhika
    வேதிகா லாரன்சுக்கு ஜோடியாக நடித்துள்ள முனி 4 படம் இந்த வாரம் வெளியாகிறது. வேதிகா அளித்துள்ள பேட்டி:

    தமிழில் சில காலம் பார்க்க முடியவில்லையே?

    ஆமாம். கன்னடம் மற்றும் மலையாளத்தில் அடுத்தடுத்து அமைந்த வெற்றிப் படங்கள்தான் என்னை வேறு எங்கும் செல்லவிடாமல் செய்தன. ‘சிவலிங்கா’ கன்னட படம் பிளாக்பஸ்டர் பட்டியலில் இடம்பெற்றதும் அங்கேயே தொடர்ச்சியாக அடுத்தடுத்து படங்களில் நடிக்க வேண்டிய சூழலுக்கு சென்றேன். அதேமாதிரி மலையாளத்தில் திலீப், பிருத்விராஜ் படம் என்று அடுத்தடுத்து வெற்றி படங்களாக அமைந்தன. மற்றபடி எந்தக் காரணமும் இல்லை. இதோ இப்போது ‘காஞ்சனா 3’ படத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 2 நேரடி தமிழ் படங்கள் நடிக்க உள்ளேன்.

    இந்தி அனுபவம் எப்படி இருக்கிறது?

    மலையாளத்தில் ‘திரிஷ்யம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இந்தியில் இயக்குனராக அறிமுகமாகிறார். அந்த படத்தில்தான் நானும் நாயகியாக அறிமுகமாகிறேன். திரில்லர் களம். பிடித்த கதை. உடனே சம்மதித்தேன். இவற்றை எல்லாம்விட பாலிவுட் உலகம் எனக்கு புதிது. அங்கே உள்ள சினிமா வாழ்வியலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதற்காகவும் காத்திருக்கிறேன்.



    கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் எப்போது பார்க்கலாம்?

    கதாநாயகியை மையமாக கொண்ட கதைகளில் நடித்தால்தான் ஒரு நடிகை கவனம் ஈர்க்கப்படுவார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. கதாநாயகன் படங்களில் கூட நான் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த படங்களும் இங்கே உண்டு. ஹீரோயினை மையமாக கொண்ட படத்தில் நிச்சயம் நானும் நடிப்பேன். எனக்கு சர்வதேச அளவில் வெப் சீரியலில் நடக்க ஆர்வம்.

    அடுத்து இயக்குனரா?

    இப்போது பாலிவுட்டில் தடம் பதித்து விட்டேன். அங்கே தொடர்ந்து நடிப்புக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இப்போதைக்கு நடிப்பை தவிர வேறு எந்தக் களத்திலும் கவனம் செலுத்தப் போவதில்லை.
    விவகே் இளங்கோவன் இயக்கத்தில் விவேக், சார்லி, பூஜா தேவாரியா நடிப்பில் உருவாகி இருக்கும் `வெள்ளைப்பூக்கள்' படத்தின் முன்னோட்டம். #VellaiPookkal #Vivekh
    இண்டஸ் கிரியேஷன்ஸ் சார்பில் அஜய் சம்பத், திகா சேகரன் இணைந்து தயாரித்திருக்கும் படம் `வெள்ளைப்பூக்கள்'.

    விவேக், சார்லி, பூஜா தேவாரியா, தேவ், பெய்ஜ் ஹெண்டர்சன், கஜராஜ், டைலர் ராய், பெய்டன் ஜஸ்டின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ஜெரால்டு பீட்டர், இசை - ராம்கோபால் கிருஷ்ணராஜூ, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., பாடல்கள் - மதன் கார்க்கி, ஒலி வடிவமைப்பு - குணால் ராஜன், கலை - சுப்ரியா கிருஷ்ணன், தயாரிப்பு - அஜய் சம்பத், திகா சேகரன், திரைக்கதை - சண்முக பாரதி, விவேக் இளங்கோவன், இயக்கம் - விவேக் இளங்கோவன்.



    படம் பற்றி இயக்குநர் பேசும்போது,

    அமெரிக்காவை சேர்ந்த பொறியாளரான விவேக் இளங்கோவன் இந்த படத்துக்காக என்னை அணுகினார். முழு கதையையும் படித்து பார்த்த நான் இந்த கதைக்கு சத்யராஜ் போன்ற ஒருவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று அவரிடம் கூறிவிட்டேன். ஆனால் அவரோ இந்த வேடத்தில் இதுவரை பார்த்திராத ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று சொல்லி என்னை சம்மதிக்க வைத்தார். ஓய்வுபெற்ற டிஐஜி வேடம். முதன்முதலாக இப்படி ஒரு வேடத்தில் நடிக்கிறேன் என்றார். 

    படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #VellaiPookkal #Vivekh

    வெள்ளைப்பூக்கள் டீசர்:

    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாததற்கான காரணத்தை கூறியிருக்கிறார். #SaiPallavi
    பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து வரவேற்பு பெற்றவர் சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும் ஒருவருடைய அழகு மாறிவிடாது.



    மேக்கப் போட்டால் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என்று எனக்கு வேண்டியவர்கள் கூறுகிறார்கள். அதன் காரணமாக தான் மேக்கப் போடாமல் நடிக்கிறேன். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனர்’ என்று அவர் தெரிவித்துள்ளார். #SaiPallavi

    மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாகும் ’பியார்’ என்ற படத்தில் பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடிப்பதாக இயக்குநர் கூறினார். #Pyaar #YogiBabu
    லாரன்சின் உதவியாளர் மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது நட்ராஜ், மனீஷா, யோகி பாபு நடிப்பில் சண்டிமுனி படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் அடுத்த படத்திற்கு ’பியார்’ என்று பெயரிட்டுள்ளார்.

    திகில் நிறைந்த கதைக்களமாக உருவாகி வரும் இந்த படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்ஸ், ஆர்த்தி, வாசுவிக்ரம், ‌ஷபிபாபு நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்ய ரிஷால் சாய் இசை அமைக்கிறார். 



    படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம். ‘வழக்கமாக ஒரு ஹீரோ காதலர்களைத்தான் சேர்த்து வைப்பார்கள். இந்த படத்தில் வித்தியாசமாக ஹீரோ யோகி பாபு இரண்டு பேய் காதலர்களை சேர்த்து வைக்கிறார். அதாவது பேயை பேயுடன் சேர்த்து வைப்பது தான் இதன் கதை. பேய்க் காதல் என்றும் சொல்லலாம். 

    ஜூலை மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஊட்டி குன்னூர் பழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது’. இவ்வாறு அவர் கூறினார். #Pyaar #YogiBabu #MilkaSSelvakumar

    தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், அவர் அடுத்ததாக தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படமொன்றின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார். #Tamannaah
    2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். ஹாரர் காமெடி பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டது.

    இப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பால், மற்ற மொழிகளிலும் ரீமேக்காக உள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. தற்போது டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் நடிக்க தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். அவரும் சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது. 



    தற்போது தமன்னாவுடன் நடிக்க உள்ளவர்கள் தேர்வு முடிந்தவுடன், அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்று தெரிவித்தார்கள். விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

    தமன்னா நடிப்பில் தேவி 2, கமோஷி உள்ளிட்ட ஹாரர் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. #Tamannaah

    தலைவி படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து இயக்குனர் விஜய் விளக்கம் அளித்துள்ளார். #Thalaivi #KanganaRanaut
    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மதராசபட்டினம், தெய்வத் திருமகள், தலைவா படங்களை இயக்கிய விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக்க இருப்பதாக அறிவித்தார். இந்த படத்தில் இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிப்பதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கங்கனா ஜெயலலிதவாக நடிப்பதற்கு சமூகவலைதளங்களில் ரசிகர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா பொருத்தமற்றவர் என்று விமர்சனங்கள் எழுந்தன. முக்கியமாக பிரியதர்ஷினி இயக்கும் த அயர்ன் லேடி படத்துக்காக ஜெயலலிதாவாகவே மாறி இருந்த நித்யா மேனன் தோற்றத்தை எடுத்து பகிர்ந்து இதுபோல இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

    ஜெயலலிதாவாக நடிக்க கங்கனா தேர்வானது எப்படி என்று இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    ‘ஜெயலலிதா என்னும் ஆளுமையை ஒரு மாநிலத்துக்குள் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு தேசிய தலைவர். இந்தியா முழுவதும் இந்தப் படத்தைக் கொண்டுசெல்ல முடிவு எடுத்துள்ளோம்.



    தற்போது இந்திய அளவில் முக்கியமான நடிகையாக கங்கனா உள்ளார். முன்னணி நாயகி இந்தக் கதாபாத்திரத்தை ஏற்றால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவரை படக்குழுவுக்குள் கொண்டுவந்தோம்.

    இந்தக் கதை இந்தியா முழுவதுமுள்ள பார்வையாளர்களால் ரசிக்கப்படும். கங்கனாவைத் தேர்வு செய்வதற்கு முன் யாரை நடிக்க வைப்பது என பல விவாதங்களை நடத்தினோம். இந்தக் கதாபாத்திரத்துக்காகப் பலரைச் சந்தித்தோம். கங்கனா மிகவும் ஆர்வத்துடன் இந்தக் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க ஆயத்தமானார். படத்துக்காக தமிழ் கற்று வருகிறார்.

    இந்தக் கதாபாத்திரத்தை உள்வாங்குவதற்காக அவருக்கு ஒரு மாதம் பயிற்சி பட்டறை நடத்தவுள்ளோம்.”

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இந்தப் படம் தமிழில் தலைவி என்ற பெயரிலும் இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் தயாராகிறது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். #Thalaivi #Jaya #JayalalithaaBiopic #KanganaRanaut #DirectorVijay

    அறம் பட இயக்குநர் கோபி நயினார் அடுத்ததாக இயக்கவிருக்கும் ஆக்‌ஷன் படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார். #BobbySimha #GopiNainar
    கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
    இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். 

    ஆனால், அதற்கு முன்பாக நடிகர் ஜெய்யை வைத்து வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்கினார். இதில் ஜெய்யுடன் டேனியல் அனி போப், கல்லூரி வினோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.



    இந்த நிலையில், கோபி நயினார் அடுத்ததாக இயக்கும் படத்தில் பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்த படம் விரைவில் துவங்கவிருக்கிறது. ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் கலந்த படமாக உருவாகும் இந்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. #BobbySimha #GopiNainar

    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. #Thupparivaalan2 #Vishal
    மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

    இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று முன்பே கூறி வந்தார்கள். தற்போது அதற்கான பணிகள் துவங்கியிருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.



    விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ படம் வருகிற மே 19-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துருக்கியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    இதுதவிர புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் அதனை மறுத்துள்ளனர். #Thupparivaalan2 #Vishal #Mysskin

    முடிவில்லா புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கஸ்தூரி, பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார். #Kasthuri
    முடிவில்லா புன்னகை படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.

    இதில் அவர் பேசும்போது, ‘அவ்வையார், மதர் தெரசா, ஜெயலலிதா ஆகியோர் பெண்களில் மிகப்பெரிய ஆளுமைகள். சினிமா சாக்கடை ஆச்சே என பலர் விமர்சனம் செய்த போது, என் தந்தைதான் எனக்கு ஆதரவு கொடுத்தார். பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. சில வீடுகளில் அதை கணவர் கொடுத்தாலும், முதலில் ஆரம்பிப்பவர்கள் தந்தைகளே.. 



    மனைவி கண்ணகியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். மகள் கல்பனா சாவ்லா ஆக வேண்டும் என நினைப்பார்கள் என்று தந்தையரை பற்றி கஸ்தூரி பேசினார். 
    சீமானுக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை விடுத்த ராகவா லாரன்ஸுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலடி கொடுத்துள்ளார். #Seeman
    நடிகர் ராகவா லாரன்ஸ், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களால் தான் வருத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாக மறைமுகமாக சீமானுக்கு லாரன்ஸ் எச்சரிக்கை ஒன்றை விடுத்தார். இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிலளித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

    அதில், நண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு, முகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள். நல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.

    அதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்து விடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்... பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை. 

    அண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்.

    எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது? அப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்? ஒன்றும் புரியவில்லை. நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்..!! எங்கு நடந்தது? சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்? 



    எங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை. இதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது? உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன?

    நீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை. அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம். 

    பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க... சிரிக்கிறதா? அழுறதான்னு தெரியலை. நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும். அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க... தேவையா?? 

    ஸ்ரீரெட்டி சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ். அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்? அவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்? 

    சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது. 

    மற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்... அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன். 

    காசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்... ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள். வேண்டாமெனவில்லை.. அது எங்களுக்கு அவசியமே இல்லை. நீங்கள் எங்கள் இலக்கல்ல. நாங்கள் மோடி, ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம். உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை. ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.

    இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

    பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் போன்ற படங்களை தொடர்ந்து, மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருக்கிறார். #PriyankaChopra
    தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியானது.

    இது வதந்தி என்று பிரியங்கா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் ஆகிய ஹாலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். தற்போது இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதைகளை சொல்வதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

    இந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை மிண்டி காலிங் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
    ×