என் மலர்

  சினிமா

  விஷால் - மிஷ்கின் இணையும் துப்பறிவாளன் 2
  X

  விஷால் - மிஷ்கின் இணையும் துப்பறிவாளன் 2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. #Thupparivaalan2 #Vishal
  மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.

  இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்று முன்பே கூறி வந்தார்கள். தற்போது அதற்கான பணிகள் துவங்கியிருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.  விஷால் நடிப்பில் ‘அயோக்யா’ படம் வருகிற மே 19-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு துருக்கியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

  இதுதவிர புதுமுக இயக்குனர் ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்பட்டது. ஆனால் படக்குழுவினர் அதனை மறுத்துள்ளனர். #Thupparivaalan2 #Vishal #Mysskin

  Next Story
  ×