என் மலர்
நீங்கள் தேடியது "லாரன்ஸ்"
- ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
- ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, நிவின்பாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் "ஜி ஸ்குவாட்" நிறுவனம் தயாரிப்பில் "பென்ஸ்" திரைப்படம் உருவாகி வருகிறது. ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இத்திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார்.
இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் ஏற்கனவே ரெமோ, சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். பென்ஸ் திரைப்படம் லோகேஷ் சினிமாடிக் யூனிவெர்ஸ்-ல் ஒரு அங்கமாக உருவாகிறது.
இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைக்கிறார். படத்தில் நடிகர் மாதவன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ட்வின் ஃபிஷ் வால்டர் என்ற வில்லன் கதாப்பாத்திரத்தில் நிவின் பாலி நடிக்கிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 2ஆவது வாரத்தில் தொடங்கியது. தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.






