என் மலர்

  நீங்கள் தேடியது "Srileaks"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரையுல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிய ஸ்ரீரெட்டி நடிக்கும் அவரது வாழ்க்கைப் படத்திற்கு இயக்குநர் வாராகி எதிர்ப்பு தெரிவித்து திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். #SriReddy #Varaki
  தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் ரீதியாக பயன்படுத்திக்கொண்டனர் என்று புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீதும் செக்ஸ் புகார் கூறினார்.

  ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்பதால் அங்கிருந்து வெளியேறிவிட்டேன் என்று கூறிய அவர். தற்போது சென்னையில் தங்கி இருக்கிறார்.

  ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தமிழில் சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஸ்ரீரெட்டி நடிகையாகவே வருகிறார். அலாவுதீன் என்பவர் இயக்குகிறார். சித்திரைச்செல்வன், ரவிதேவன் ஆகியோர் தயாரிக்கிறார்கள். ஸ்ரீரெட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் படத்தில் காட்சிபடுத்துகிறார்கள்.  இந்த படத்துக்கு தடைவிதிக்க முற்பட்டால் பெரிய விளைவுகள் ஏற்படும் என்று ஸ்ரீரெட்டி எச்சரித்து உள்ளார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி படத்துக்கு இயக்குநரும், நடிகருமான வாராகி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

  “திரையுலகினர் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஸ்ரீரெட்டி வாழ்க்கையை படமாக்குவது கலாசாரத்துக்கு எதிரானது. அவரது கதையை படமாக எடுக்கக் கூடாது. மீறி எடுத்தால் அதை தடுக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். படத்துக்கு ‘ரெட்டி டைரி’ என்று தலைப்பு வைத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தலைப்புக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட வர்த்தக சபை, கில்டு ஆகிய அமைப்புகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #Varaki

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, ஸ்ரீரெட்டியின் கேள்விக்கும் பதில் அளித்தார். இதையடுத்து சிம்புவுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். #SriReddy #STR #Simbu
  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

  இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார். 

  அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.

  அதற்கு பதில் அளித்த சிம்பு, ‘‘ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.

  ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக, தான் செய்ய வேண்டும் என ஆசைப்படும் வி‌ஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.


  அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.

  பெண் என்பதற்கான சில வி‌ஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.

  இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப் போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’

  இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். #SriReddy #STR #Simbu #AskSTR

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று இயக்குநர் வாராகி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டி புகார் அளித்துள்ளார். #SriReddy #SriLeaks
  சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து புகார் கூறிவருகிறார்.

  தன்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு பட வாய்ப்பு அளிக்காமல் ஏமாற்றிய தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் பட்டியலையும் வெளியிட்டு இருக்கிறார். ஸ்ரீரெட்டி திரையுலகினர் மீது செக்ஸ் புகார் கூறி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக இயக்குனரும், நடிகருமான வாராகி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

  ஸ்ரீரெட்டியே தான் விரும்பி சிலருடன் பாலியலில் ஈடுபட்டதாக கூறியிருப்பதால் அவர் மீது விபசார பிரிவிலும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவிலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாராகி தனது மனுவில் அவர் கூறியிருந்தார்.

  நான் பாலியல் தொழிலாளி இல்லை. பாலியல் தொழிலாளி என்று அவதூறு செய்வதால் தற்கொலை செய்து கொள்ளும் உணர்வு வருகிறது என்று ஸ்ரீரெட்டி கூறினார். இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த ஸ்ரீரெட்டி தன்னை விலைமாது என்று கூறிய இயக்குனர் வாராகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தார்.

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-

  இந்தி, தமிழ், தெலுங்கு உள்பட அனைத்து மொழி பட உலகிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் உள்ளன. பட வாய்ப்பு கேட்பவர்களை படுக்கையில் பயன்படுத்துகிறார்கள். நான் பாதிக்கப்பட்ட பெண். இந்த பிரச்சினையில் விழிப்புணர்வு ஏற்படுத்தவே போராடுகிறேன். ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்து இருக்கிறேன். எங்குமே எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.  நீதிக்காக போராடுகிறேன். இந்த பிரச்சினையை நடிகர் சங்கத்துக்கு கொண்டு சென்றும் பயன் இல்லை. நான் விலைமாது என்றும் என்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாராகி என்பவர் புகார் கூறி இருக்கிறார். அவரை யார் என்றே தெரியாது. என்னை விலைமாது என்கிறாரே? அவர் என்னிடம் வந்தாரா? எனக்கு பணம் கொடுத்தாரா?

  பெண்களுக்கு மரியாதை கொடுக்க அவருக்கு தெரியவில்லை. என்னை விலைமாது என்று கூறிய வாராகி மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தி கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்து இருக்கிறேன். இந்த புகார் மீது உளவு பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளனர். இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #Varaki

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சினிமா பிரபலங்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கி வரும் ஸ்ரீரெட்டி, விபச்சாரம் செய்வதாக இயக்குநர் வாராகி கூறிய நிலையில், என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள் என்று வாராகிக்கு, ஸ்ரீரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். #SriReddy #Varaki
  பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றியதாக தெலுங்கு பட உலகினர் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது தமிழ் சினிமா மீது புகார் கூறி வருகிறார். சென்னையில் முகாமிட்டு தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறிவருகிறார். 

  ஆதாரம் இல்லாமல் யார் மீதும் குற்றம் சொல்ல கூடாது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் அவரை கண்டித்தது. தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் போலீஸ் விசாரணை நடத்தினால் அவற்றை வெளியிடுவேன் என்றும் அவர் கூறினார். 

  இதற்கிடையே இயக்குநர் வாராகி சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஸ்ரீரெட்டிக்கு எதிராக புகார் அளித்தார். நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஸ்ரீரெட்டி ஈடுபடுவதாகவும் விபச்சாரம் மற்றும் மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.  இந்த நிலையில் ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் கூறி இருப்பதாவது,

  நான் பாலியல் தொழிலாளி இல்லை. என்னை படுக்கையில் பயன்படுத்தி விட்டு உணவு கூட தராமல் வெளியே அனுப்பினார்கள். யாரிடம் இருந்தும் ஒரு பைசா கூட வாங்கவில்லை. அவதூறாக பேசிய வாராகி என்னிடம் அறை வாங்க தயாராக இருங்கள். என்னிடம் அடி வாங்க தகுதியானவர் நீங்கள். பாதிக்கப்பட்ட பெண் நான். எனக்கு மரியாதை அளிப்பதற்கு பதிலாக, என்னை வைத்து மலிவான விளம்பரம் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். #SriReddy #Varaki

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவா மனசுல புஷ்பா படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் வாராகி, நடிகர்கள், இயக்குநர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து வரும் ஸ்ரீரெட்டி செய்வது விபச்சாரம் தான் என்று தாக்கிப் பேசினார். #Srireddy #Varaki
  வாராகி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சிவா மனசுல புஷ்பா. இந்த படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் மறுக்கப்பட்டதாக வாராகி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வாராகி, 

  படத்தின் பெயரை மாற்ற சொல்லி தணிக்கை குழு வற்புறுத்தியதாக கூறினார். சென்சார் போர்டு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. என் படத்தின் பெயரும், அதில் வரும் கதாபாத்திரங்களும் தான் பிரச்சனை என்றால் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் பெயருக்கு என்ன அர்த்தம் என்று சென்சார் போர்டுக்கு கேள்வி எழுப்பினார். அந்த மாதிரி பெயராக இருந்தால் மாற்றலாம். பெயரை மாற்றுவதற்கான சரியான காரணமும் சொல்லவில்லை.   ஸ்ரீரெட்டி மீது புகார் கூறியது பற்றி கேட்டதற்கு வாராகி கூறியதாவது,

  சினிமா துறையே ரொம்ப நலிந்து கிடக்கிறது. சமூக சீர்த்திருத்த கருத்துக்களை மக்களிடையே கொண்டுபோய் சேர்த்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். லாரன்ஸ் யார் என்பது நமக்கு தெரியும், மக்களட, ஊனமுற்றோர் என லாரன்ஸ் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். ஸ்ரீரெட்டி ஒன்றும் குழந்தை கிடையாது. அவர் அனைத்திலும் உடன்பட்டு தான் சென்றிருக்கிறார். படவாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஒருமுறை ஏமாறி போயிருக்கலாம். பலமுறை ஏமாறினால் அதுக்கு பெயர் என்ன? அது விபச்சாரம் என்று தான் நான் சொல்கிறேன். அதனால் தான் விபச்சார வழக்கில் ஸ்ரீரெட்டியை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளேன். #Srireddy #Varaki

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு சினிமாவை தொடர்ந்து தமிழ் சினிமா மீது தொடர் குற்றங்களை சுமத்தி வரும் ஸ்ரீரெட்டி, தான் பாலியல் சித்ரவதைக்கு ஆளனதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks
  தெலுங்கு பட உலகில் தன்னை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக போராட்டங்கள் நடத்திய ஸ்ரீரெட்டி சென்னைக்கு வந்து இருக்கிறார். சினிமா பிரபலங்கள் மீது மீண்டும் புகார் சொல்ல தொடங்கி இருக்கிறார். அவர் பேட்டி வருமாறு:-

  சென்னை வந்தது ஏன்?

  சில நாட்களுக்கு சென்னையில்தான் இருக்கப் போகிறேன். இங்குள்ள திரையுலகினரால் நான் சந்தித்த கசப்பான அனுபவங்களை மனம் திறந்து பேச இருக்கிறேன்.

  கேள்வி:- சினிமா துறையில் பாலியல் தொல்லைகள் பிரச்னை இருக்கும்னு தெரிஞ்சுதான் உள்ளே வந்தீங்களா?”

  பதில்:- எல்லோருக்கும் தெரியுமே. எல்லோரும் இந்த மாதிரியான பிரச்னைகள் இருக்குனு சொல்றாங்க. ஆனா, அதுக்கு ஆதாரம் எதுவும் இல்லையேனு நான் அதைப் பத்தி அவ்வளவா யோசிக்கலை. மீடியா துறை ரொம்ப ஸ்டிரிக்ட். யாரும் யாரையும் இந்த வி‌ஷயத்துக்காகக் கட்டாயப்படுத்த மாட்டாங்க. ஆனா, சினிமாவுல அப்படி இல்லை. நேரடியாவே இந்த வி‌ஷயத்துக்காக அப்ரோச் பண்ணுவாங்க.”

  கேள்வி:- உங்களுக்கு இந்த பிரச்சினை முதல் முதலா எப்போது நடந்தது? அப்போது, எப்படி எதிர் கொண்டீங்க?”

  பதில்:- ஒரு தெலுங்கு பட ஷூட்டிங்கிற்காக கிராமத்துக்குப் போயிருந்தோம். ஷூட்டிங் முடிஞ்ச பிறகு, நைட் டைம்ல அந்த டைரக்டர் என் ரூம் கதவைத் தட்டினார். அவர், என்னை அடையத்தான் முயற்சி பண்றார்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். `இதைப் பத்தி முடிவெடுக்க எனக்கு ரெண்டு நாள் டைம் வேணும்‘னு சொல்லிட்டேன். பிறகு, நல்லா நடிக்கலைனு எல்லோர் முன்னாடியும் திட்டுறது, ஒன் மோர், ரீடேக் எடுத்து டார்ச்சர் பண்றது என்று வேறவிதமா நடந்து கிட்டார். அந்த ரெண்டு நாளும் எனக்கு நரகமா இருந்தது. எனக்குக் கெட்ட பெயர் வந்திடுச்சுனா, அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காது, நடிகை ஆக முடியாதுனு நானும் அதுக்கு `சரி’னு சொல்லிட்டேன்.

  கேள்வி:- இதை பற்றி பேச வேண்டும் என்று ஏன் முடிவு எடுத்தீர்கள்?

  பதில்:- இதில் நான் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தால் இதை பற்றி பேசி இருக்க மாட்டேன். ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்காக தான் குரல் கொடுக்கிறேன். எல்லாவற்றையும் மறந்துவிட்டு திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை.  கேள்வி:- முன்னணி நடிகைகளை இழுத்தது ஏன்?

  பதில்:- எல்லா நடிகைகளுமே தொடக்கத்தில் இந்த கசப்பான அனுபவங்களை கடந்தே வருகிறார்கள். பிரபல நடிகை ஆகிவிட்டால் இந்த தொல்லை இருக்காது. அதன் பிறகு அவர்கள் விரும்புபவர்களுடன் மட்டும் செல்லலாம். உங்கள் தேதி அவர்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் எதுவும் தரவேண்டியதில்லை. உங்களுக்கு வாய்ப்பு தேவைப்பட்டால் கொடுக்க வேண்டி இருக்கும். நீங்கள் தராவிட்டால் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் கூட தர மாட்டார்கள். மோசமான ஆடைகளை கொடுத்து உடுத்த சொல்வார்கள். சில ஹீரோக்கள் ஹீரோயின்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். அவர்கள் ஏன் தங்கள் மனைவியை நடிக்க அனுமதிப்பதில்லை. காரணம் இதுதான். முடியாது என்று சொல்லி இருந்தால் வீட்டிலேயே இருந்து இருக்க வேண்டியது தான். நடிகை ஆகி இருக்கவே முடியாது. நான் விரும்பி பகிரவில்லை.

  கேள்வி:- அரை நிர்வாண போராட்டம் நடத்தியது ஏன்?

  பதில்:- நிறைய பேர் என்னை நிர்வாணமாக பார்த்து இருக்கிறார்கள். அதனால் தான் அந்த போராட்டத்தை கையில் எடுத்தேன். ஒரு இந்திய பெண்ணாக நிர்வாணமாக நிற்க கூச்சப்பட்டேன். தேவைப்பட்டால் அப்படியும் போராட்டம் நடத்த தயார்.

  பதில்:- வாய்ப்புக்காகவோ பரபரப்புக்காகவோ இதை வெளிக்கொண்டு வரவில்லை. இந்த பரபரப்பு என்பது சில நாட்கள் தான். இன்னொரு பரபரப்பு வந்தால் இது மறக்கடிக்கப்படும். எனக்கு அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காது. இந்த வி‌ஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவே விரும்பினேன்.

  கேள்வி:- உங்கள் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருக்கிறதா?

  பதில்:- இருக்கிறது. ஒவ்வொன்றாக வெளியிடுவேன். நான் தனியாக வசித்து வருவதால் என் மொபைலில் எதையும் அழிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

  கேள்வி:- உங்களை தவறாக நினைப்பார்கள் என்ற அச்சம் இல்லையா?

  பதில்:- நான் மற்றவர்களுக்காக பிறக்கவில்லை. எனக்காக வாழ்பவள். எனவே மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #SriLeaks
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரண்மனை படப்பிடிப்பின் போது சுந்தர் சி.யுடன் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட் செய்ய சொன்னதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். #SriReddy #SriLeaks #SundarC
  தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தமிழ் திரையுலகின் இருண்ட பக்கத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதாக தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் குற்றம்சாட்டி வருகிறார்.

  இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியதால் தமிழ் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடிகர் விஷால் தன்னை மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.

  பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறிவரும் ஸ்ரீரெட்டிக்கு ஐதராபாத்தில் நுழைய தடை விதிக்கப்படலாம் என்ற வதந்தி பரவி உள்ளது. 

  ஐதராபாத்தில் நுழைய தனக்கு தடை விதிக்க வேண்டாம் என்று தெலுங்கானா முதல்மந்திரி சந்திரசேகரராவுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதிகள் மீதும் செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார்.   தற்போது  நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதுகுறித்து ஸ்ரீரெட்டி அவரது பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார்.

  ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர்.சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

  ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும் (கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஓட்டலுக்கு வரச் சொன்னார்.
   
  படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன்பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி பேஸ்புக்கில் போஸ்ட் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #SundarC

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரைத்துறை பிரபலங்கள் பாலியல் ரீதியாக தன்னை பயன்படுத்திக் கொண்டாதாக குற்றம்சாட்டியுள்ள நடிகை ஸ்ரீரெட்டி, தனது பட்டியலில் மேலும் சிலர் இருப்பதாக கூறியுள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks
  சென்னை:

  தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் திரைத்துறையில் சிலர் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றியதாக கூறி வருகிறார். தனது முகநூல் பக்கத்தில் தமிழ் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் ஆகியோர் பெயரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

  இன்று வெளியிட்டுள்ள பதிவில், விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாகவும், ஆனாலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

  இந்த நிலையில் தந்தி டிவிக்கு  அளித்த பேட்டியில் ஸ்ரீ ரெட்டி கூறியதாவது:-

  நடிகர்கள் பற்றி நான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எனக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன். இது தென்னிந்திய திரையுலகிற்கே அவமானம். சில முக்கிய நபர்கள் உண்மையை மூடி மறைக்க முயற்சிக்கிறார்கள். இதோடு முடிந்துவிட வேண்டும் என நினைக்கிறார்கள். நியாயம் கிடைப்பதற்கான முயற்சி எடுக்க அவர்கள் முன்வரவில்லை.  சினிமா துறை மட்டுமல்ல, 90 சதவீத பெண்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். சினிமாத் துறையில், சின்ன சின்ன உடைகளை பெண்கள் அணிந்து நடிக்க வேண்டும் என்கிறார்கள். சினிமாவில் பெண்களை கவர்ச்சி பொருளாகவே ஆண்கள் பார்க்கிறார்கள். பாலியல் ஆதாயத்தில் மட்டுமே சிலர் கவனம் செலுத்துவது ஏன் என தெரியவில்லை. கதையில் கவனம் செலுத்தினால், படங்கள் நன்றாக ஓடும்.

  கேள்வி - மேலும் யாருடைய பெயர்களையாவது வெளியிட நீங்கள் திட்டமிட்டிருக்கிறார்களா?

  பதில்- ஆம், எனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள்.

  இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறினார். #SriReddy #SriLeaks #TamilLeaks

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் திரையுலகில் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றியவர்கள் பட்டியலை வெளியிட்டு வரும் ஸ்ரீ ரெட்டி, தனக்கு விஷால் மிரட்டல் விடுத்திருப்பதாக கூறியிருக்கிறார். #SriReddy #Vishal
  சென்னை:

  தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் இருப்பதாக அவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் தமிழ் சினிமா உலகிலும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திவிட்டு, வாய்ப்பு அளிக்காதவர்களின் பட்டியலை வெளியிடப்போவதாக கூறியிருந்தார்.

  அதன்படி, தமிழ்லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமாவில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீரெட்டி. அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் பெயரை வெளியிட்டு தமிழ் திரையுலகை அதிர்ச்சி அடைய வைத்தார். அந்த வரிசையில் நேற்று ராகவா லாரன்சையும் இணைத்துள்ளார்.

  மூன்று முக்கிய நபர்களின் பெயர்களை ஸ்ரீ ரெட்டி அம்பலப்படுத்தியது, தமிழ் திரையுலகை கதிகலங்கச் செய்துள்ளது. இன்னும் எத்தனை பேர் ஸ்ரீரெட்டியின் பட்டியலில் வருவார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.  இந்நிலையில், ஸ்ரீ ரெட்டி தனது அடுத்த பதிவை இன்று வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் விஷாலிடம் இருந்து தனக்கு மிரட்டல் வருவதாக கூறியுள்ளார். ஆனாலும், கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Vishal

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks
  தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றசாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது.

  கடந்த வாரம் ஒரு பேட்டியில், ’தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் இயக்குனர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குனர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்தது’.

  இந்த நிலையில் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் நேற்று ஸ்ரீரெட்டி அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர் என குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.   அதில், 5 வருடங்களுக்கு முன்னர், ஐதராபாத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவின் பார்டி நடைபெற்ற பார்க் ஹோட்டல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன் என்றும், கிளப்பில் இருவரும் சேர்ந்து நடனமாடிய போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியது நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

  மேலும் மற்றொரு போஸ்டில், இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Srikanth

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவிலும் பாலியல் தொந்தரவு இருப்பதாகவும், ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார். #SriReddy #SriLeaks
  சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் பாலியல் குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிக அளவில் எழுந்திருக்கிறது. இதன் உச்சக்கட்டமாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறினார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

  கேள்வி:- “உங்களுடைய ஆரம்ப கால வாழ்க்கை எப்படி இருந்தது?”

  பதில்:- “நான் சிறு வயதிலேயே துணிச்சலான பெண்ணாக தான் வளர்ந்தேன். என்னுடைய குடும்பம் நடுத்தரமானது. டி.வி.யில் செய்தி வாசிப்பாளராக இருந்தேன். அங்கிருந்து சினிமாவில் நடிக்க வந்தேன்.”

  கே:- “பெரிய ஹீரோக்களை எதிர்க்கும் போது பல்வேறு சிக்கல்கள் வருமே. எப்படி சமாளிக்கிறீர்கள்?”

  ப:- “என்னைப் பொறுத்த வரை ‘வி.ஐ.பி.’, சாமானியன் என்பதெல்லாம் கிடையாது. எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கிறது. அல்லுரி சீதா ரமராஜூ, சே குவாரா, பகத் சிங்... இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். பூலான் தேவி, ஜோதிரவ் பூலே ஆகியோரை முன்மாதிரியாக நினைக்கிறேன். அதனால் எனக்கு உள்ளுக்குள் தைரியம் இருக்கிறது.”

  கே:- “உங்களுக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் ஆண்கள் மீது வெறுப்பை உண்டாக்கியிருக்கிறதா?”

  ப:- “அப்படி சொல்ல முடியாது. நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல. ஆண்களை நான் ரொம்பவும் நேசிக்கிறேன். மதிக்கிறேன். ஆனால் ஆண்கள் மட்டும் எப்படி வேண்டுமானாலும் உடை அணியலாம், எந்த நேரம் என்றாலும் வெளியே செல்லலாம். பெண்களுக்கு கட்டுப்பாடு வேண்டும் என்று சொல்வதை நான் எதிர்க்கிறேன். பெண்கள் மீது பாலியல் ரீதியிலான தொந்தரவு எழுந்தால் தட்டிக் கேட்பேன்.”  கே:- “உங்கள் குற்றச்சாட்டில் தமிழ் இயக்குனர்களின் பெயர்களும் அடிபட்டதே?”

  ப:- “தமிழ் சினிமா மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. ஆனால், இங்கும் பாலியல் தொந்தரவு இருக்கிறது. ஒரு மிகப்பெரிய இயக்குநர், பட வாய்ப்புத் தருவதாகக் கூறி என்னை பயன்படுத்திக்கொண்டார்.

  நேரம் வரும்போது கண்டிப்பாக அதை பகிரங்கமாக சொல்வேன். இந்த ஒரு வி‌ஷயத்தை தவிர்த்துவிட்டுப் பார்த்தால்... தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். கோவில் கட்டும் அளவுக்குக்கூட பாசம் வைக்கிறார்கள்..”

  கே:- “தெலுங்கு கதாநாயகர்கள் மீது நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா?”

  ப:- “எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் 90 சதவீதம் ஆதாரம் இருக்கிறது. பத்து சதவீதம் மட்டும் இல்லை. அமெரிக்காவில் ‘பலான வி‌ஷயத்தில் மாட்டிய தெலுங்கு நடிகைகள்’ என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த வி‌ஷயத்தை விசாரிப்பதற்கு அரசு இறங்கி இருப்பது, என்னுடைய குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.”

  கே:- “உங்களை தமிழ் சினிமாவில் எப்போது பார்க்கலாம்?”

  ப:- “தமிழ் சினிமாவில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். என் வாழ்க்கையை தமிழ் சினிமாவிலேயே அர்ப்பணிக்க நினைக்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார். #SriReddy #SriLeaks