என் மலர்

  சினிமா

  ஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய பிரபல தமிழ் நடிகர்
  X

  ஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய பிரபல தமிழ் நடிகர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி, அடுத்ததாக தமிழ் லீக்ஸ் என்ற தலைப்பில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஒருவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks
  தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். ஸ்ரீரெட்டியின் குற்றசாட்டு மற்றும் போராட்டங்களில் தென் இந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது.

  கடந்த வாரம் ஒரு பேட்டியில், ’தெலுங்கு மட்டும் அல்லாது தமிழ் இயக்குனர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குனர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்தது’.

  இந்த நிலையில் தமிழ் லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கில் நேற்று ஸ்ரீரெட்டி அவரது முகநூல் பக்கத்தில், தமிழ் பட இயக்குனர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர் என குறிப்பிட்டு இருக்கிறார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அடுத்ததாக நடிகர் ஸ்ரீகாந்த் குறித்த ஒரு பதிவை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.   அதில், 5 வருடங்களுக்கு முன்னர், ஐதராபாத்தில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் விழாவின் பார்டி நடைபெற்ற பார்க் ஹோட்டல் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன் என்றும், கிளப்பில் இருவரும் சேர்ந்து நடனமாடிய போது, எனக்கு வாய்ப்பு தருவதாக கூறியது நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். 

  மேலும் மற்றொரு போஸ்டில், இந்த நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என்று குறிப்பிட்டிருக்கிறார். #SriReddy #SriLeaks #TamilLeaks #Srikanth

  Next Story
  ×