என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
ஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி
By
மாலை மலர்13 Aug 2018 6:36 AM GMT (Updated: 13 Aug 2018 7:05 AM GMT)

தனியார் பத்திரிகை நடத்திய நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த சிம்பு, ஸ்ரீரெட்டியின் கேள்விக்கும் பதில் அளித்தார். இதையடுத்து சிம்புவுக்கு நடிகை ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். #SriReddy #STR #Simbu
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் உள்ள நடிகர்கள் வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டு ஏமாற்றி விட்டதாக தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சமீபத்தில் வார இதழ் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் இணையதள ரசிகர்களின் கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் அளித்தார்.
அப்போது அவரிடம் நடிகை ஸ்ரீரெட்டியும் கேள்வி கேட்டிருந்தார். ‘‘உங்களின் எதிர்கால மனைவியிடம் என்னென்ன தகுதிகளை எதிர்பார்க்கிறீர்கள்?’’ என்று அவர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த சிம்பு, ‘‘ஸ்ரீரெட்டியின் பட்டியலில் நான் இல்லை என்பது தெரிஞ்சுடுச்சு..’’ என பார்வையாளர்களிடம் சொல்லிவிட்டு பெண்கள் அதிகாரம் பற்றி பேசினார்.
ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் பெண்கள் செய்வதுதான் பெண்கள் முன்னேற்றம், அதிகாரம் என நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், உண்மையில் அது அல்ல. ஒரு பெண்ணாக, தான் செய்ய வேண்டும் என ஆசைப்படும் விஷயங்களை, செய்ய விடாமல் இந்த சமுதாயம் தடுக்கிறது. அதை செய்ய விடுங்கள் என சண்டைபோடுவதே பெண்களின் அதிகாரம்.
Thank you #simbu sir for answering my question... you are so genuine just like your father t.rajendhar gaaru... I respect tr sir a lot... #SriReddypic.twitter.com/umov6Hy0Um
— Sri Reddy (@srireddy_) August 10, 2018
அதற்குத்தான் ஆதரவு தரவேண்டும், ஆண்களுக்கு நிகராக இருப்பதுதான் பெண்கள் முன்னேற்றம் என்பதில்லை. ஏற்கனவே ஆண்களுக்கு நிகராகத்தான் இருக்கிறீர்கள். நீங்களாக ஆண்களுக்கு நிகராக இல்லை என கற்பனை செய்து கொள்கிறீர்கள்.
பெண் என்பதற்கான சில விஷயங்கள் உள்ளது. வரக்கூடிய மனைவி அந்த புரிதல் உள்ள பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பதாக அவர் பதில் அளித்தார்.
இதைத்தொடர்ந்து சிம்புவை பாராட்டி சமூக வலைத்தளத்தில் ஸ்ரீரெட்டி ஒரு வீடியோ படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் ‘‘நன்றி, சிம்பு சார். என் கேள்விக்கு பதில் அளித்ததற்காக... உங்க அப்பா டி.ராஜேந்தரைப் போல் நீங்களும் நல்ல மனிதர். டி.ஆரை நான் மிகவும் மதிக்கிறேன்...’’
இவ்வாறு ஸ்ரீரெட்டி கூறியிருக்கிறார். #SriReddy #STR #Simbu #AskSTR
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
