என் மலர்
சினிமா செய்திகள்
பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் போன்ற படங்களை தொடர்ந்து, மீண்டும் ஹாலிவுட் படத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க இருக்கிறார். #PriyankaChopra
தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். கடந்த டிசம்பர் மாதம் பிரபல அமெரிக்க பாப் பாடகரும், நடிகருமான நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்யப்போவதாக லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியானது.
இது வதந்தி என்று பிரியங்கா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தற்போது ‘த ஸ்கை இஸ் பிங்க்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே பே வாட்ச், எ கிட் லைக் ஜாக், இஸ்னாட் ஆகிய ஹாலிவுட் படங்களில் பிரியங்கா சோப்ரா நடித்துள்ளார். தற்போது இன்னொரு ஹாலிவுட் படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில், “பிரபல ஹாலிவுட் நடிகை மிண்டி காலிங்குடன் இணைந்து புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்கிறேன். நல்ல கதைகளை சொல்வதில் விருப்பம் கொண்ட இரண்டு பெண்கள் இந்த படத்தில் இணைந்திருப்பது பெருமையாக உள்ளது. விரைவில் சினிமாவில் சந்திக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் இந்திய திருமணங்கள் பற்றிய நகைச்சுவை படமாக தயாராகிறது. இந்தியாவிலும் அமெரிக்காவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. படத்தை மிண்டி காலிங் இயக்குவார் என்று கூறப்படுகிறது.
கௌதம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தோள் கொடு தோழா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ் நடிக்க இருக்கிறார். #JaiAkash #TholKoduThozha
ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு "தோள் கொடு தோழா" என்று நட்பை கெளரவப்படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்கள். கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள்.
கதாநாயகியாக மும்பையை சேர்ந்த அக்ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி கெளதம் இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா.
தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது’ என்றார்.
பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இனியா, தற்போது சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் படத்தில் நடித்து வருகிறார். #Iniya #Coffee
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.
ஏழ்மை நிலையிலிருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண், மிக இளம் வயதிலேயே தனது பெற்றோரை இழந்துவிடுகிறார். வாழ்வின் அனைத்து சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு, சமாளித்து, இலட்சியத்துடன் தனது கனவை நனவாக்க முயலும் போதும், பொறுப்புணர்ச்சியுடன் தனது தம்பியை நன்கு படிக்க வைத்து, வளர்த்து ஆளாக்குகிறாள். இனி சுபிட்சமாக வாழலாம், கஷ்டங்கள் தீர்ந்துவிடும் காலம் வந்துவிட்டது எனும் போது, சற்றும் எதிர்பாராத பெரும் பின்னடைவுகளையும், அதிர்ச்சிகரமான நிகழ்வுகளையும் அவள் எதிர் கொள்ள வேண்டிய சூழல் அமைகிறது. அதை அதில் எப்படி வெற்றி பெற்றாள் என்பதே கதை.

நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை இத்திரைப்படம் தோலுரித்து காட்டியிருக்கும் விதம் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்க இருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கடேஷ் எஸ் ஒளிப்பதிவு பொறுப்புகளை ஏற்றுகொள்ள, மோகன் ராஜா பாடல்களை எழுத, வெங்கட்நாத் இசை அமைத்திருக்கிறார். வெகு நேர்த்தியாக உருவாகியிருக்கும் இத்திரைப்படம், விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வரும் வரலட்சுமி, அடுத்ததாக ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கிறார். #Varalakshmi
நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிப் படங்கள், டிவி நிகழ்ச்சி என பிசியாகவே உள்ளார். தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இவை தவிர பிக்பாஸ் ஐஸ்வர்யா, சுபிக்ஷா, ஆஷ்னா சவேரியுடன் கன்னித்தீவு, விமலுடன் கன்னிராசி, ஜெய்யுடன் ‘நீயா 2’, வைபவுடன் காட்டேரி, தெலுங்கில் சந்தீப் கிஷணுடன் தெனாலி ராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் எனப் பல படங்களில் மற்ற நடிகர்களுடன் இணைந்து நாயகியாகவும் நடித்து வருகிறார்.
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் from our team #Chasing shoot in progress#Malaysia
— varalaxmi sarathkumar (@varusarath) April 14, 2019
Directed by #Veerakumar
Producer #Balachandran
DOP @krishnasamy_e
Music #Dhasi@Bala_actor@YAMUNA7102#actorjerrold#ActorSwissRaghu@MachendranRamya@jaya_stylist@Aadhi86200835@onlynikilpic.twitter.com/jywuXv9vcF
இந்நிலையில் வீரக்குமார் இயக்கத்தில் தஷி இசையமைக்க கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் `சேஸிங்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் தமிழ்ப் புத்தாண்டையொட்டு வெளியிடப்பட்டது. ஆக்ஷன் திரில்லர் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் கஜோல், அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #Jayalalithaa
அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது தவிர இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இயக்குனர் பாரதிராஜா, ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சித்து வருகிறார்.
கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதொடராக இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்த படத்துக்கு ‘சசி லலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சசி லலிதா படத்தில் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். மும்பை சென்று கஜோலை சந்தித்து கதையை கூறிவிட்டு வந்துள்ளார்.
சசிலலிதா படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அமலா பால் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பாரா என்பது இனிதான் தெரியும்.
ரோஜா, அழகன், ஜென்டில்மேன் படங்களில் நடித்து பிரபலமான நடிகை மதுபாலா, 20 வருடத்திற்குப் பிறகு பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். #Madhubala
கன்னட திரையுலகத்திலிருந்து தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார் புதுமுக இயக்குநர் ஹரி சந்தோஷ். இவர் கன்னடத்தில் இயக்கிய காலேஜ் குமாரா படத்தின் தமிழ் ரீமேக்கை அறிமுக நடிகர் ராகுல் விஜய் மற்றும் நடிகை பிரியா வட்லமணி ஆகியோரைக் கொண்டு எடுக்க உள்ளார்.
இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரபு மற்றும் அக்னிதேவி படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ள மதுபாலா நடிக்க உள்ளார். இப்படத்தின் துவக்கவிழா சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் பிரபு பேசும்போது, ’கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியுள்ள ஹரி சந்தோஷ், கர்நாடக அரசின் மாநில விருதையும் பெற்றுள்ளார். எனக்கும் அறிமுக இயக்குநருக்கும் ரொம்ப ராசி. இதுவரை 81 புதுமுக இயக்குநரை தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறோம்“ என்றார்.

படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கும் மதுபாலா பேசும்போது ’ரோஜா, அழகன், ஜென்டில்மேன் அப்படின்னு தமிழ் சினிமா எனக்கு நிறைய பேர் வாங்கிக் கொடுத்திருக்கு. தமிழ் படத்துல வாய்ப்பு கிடைக்குறது ரொம்ப அதிர்ஷ்டம்.
பிரபு சார் இருக்காங்கன்னு சொன்ன உடனே 20 வருஷத்துக்குப் பிறகு பிரபு சாரோட இந்தப் படத்துல நடிக்கப் போறோம்னு சந்தோஷத்துல இருந்தேன். பாஞ்சாலங்குறிச்சி பட ஷூட்டிங் நேரத்துல பொள்ளாச்சில என்னை, தன் குடும்பத்துல ஒருத்தரா தங்கை மாதிரி பார்த்துக்கொண்டார். எல்லோரும் அவரைப்பத்தி இவ்வளவு நல்லபடியா பேசுறாங்கனா அதுக்கு அவரோட பண்புதான் காரணம். 20 வருடத்துக்குப் பிறகும் அதேமாதிரி இருக்கார்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்கும் நிலையில், அந்த படத்தில் அவரது சகோதரியாக ஜோதிகா நடிக்கவிருக்கிறார். #Karthi #Jyothika
ஜோதிகா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான காற்றின் மொழி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடிக்கிறார்.
அத்துடன் பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் ஜோதிகா இணைந்துள்ளார். கார்த்தி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில் இருவருக்கும் என்ன கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது சகோதரன், சகோதரியாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள நடிகர் அன்சன் பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Karthi #Jyothika #JeethuJoseph
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. #RRR #Rajamouli
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் முன்னணி வேடங்களில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக ஆலியாபட், வெளிநாட்டு நடிகை டெய்சி நடிக்க ஒப்பந்தமானார்கள்.
ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர்.
நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா என 3 பேரிடம் பேச்சு நடக்கிறது. இவர்களில் நித்யா மேனனுக்கு ஸ்கிரீன் டெஸ்ட் முடிந்துவிட்டது. அவர் டெய்சிக்கு பதிலாக நடிக்கிறாரா அல்லது வேறுபாத்திரத்தில் நடிக்கிறாரா என்பதை பட தரப்பு உறுதி செய்யவில்லை. வேறு கதாபாத்திரத்தில் அவர் நடித்தால் டெய்சியின் வாய்ப்பு ஷ்ரத்தாவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு குஜராத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை தழுவி எழுதப்பட்டிருக்கிறது. படம் அடுத்த ஆண்டு ஜூலை 30-ந் தேதி உலகம் முழுவதும் 10 மொழிகளில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #RRR #Rajamouli #JrNTR #RamCharan #NithyaMenen
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை ஒருவர் நடித்து வருகிறார். #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய்யின் 63-வது படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் அடுத்தகட்டப் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான கால்பந்து விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.
இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார் விஜய். அந்த கால்பந்து அணியின் கேப்டனாக இந்துஜா நடித்து வருகிறார். இதற்காக பல்வேறு பயிற்சிகள் எடுத்து, நடித்து வருகிறார்.

நயன்தாரா, ஜாக்கி ஷெராப், கதிர், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இந்த படத்தை தயாரிக்கிறார். #Thalapathy63 #Vijay #Nayanthara #Kathir #Indhuja
சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் - சுவாதி திரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் `மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் முன்னோட்டம். #MehandiCircus
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `மெஹந்தி சர்கக்ஸ்'.
மாதம்பட்டி ரங்கராஜ், சுவேதா திரிபாதி நாயகன், நாயகிகளாக நடித்திருக்கிறார்கள். வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், கபிர் துஹான் சிங், ரவி மரியா, அங்குர் விகல், சன்னி சார்லஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - செல்வகுமார்.எஸ்.கே., படத்தொகுப்பு - பிலோமின் ராஜ், கலை - சதீஷ்குமார், பாடல்கள் - யுகபாரதி, ஒலி வடிவமைப்பு - அழகியகூத்தன் - சுரேன், ஆடை வடிவமைப்பு - பிரவீன்ராஜா.டி, நடனம் - பாபி, சண்டை பயிற்சி - பில்லா ஜெகன், தயாரிப்பு மேற்பார்வை - டி.ஆறுமுகம், நிர்வாகத் தயாரிப்பு - முகேஷ் சர்மா, இணைத் தயாரிப்பு - வி.கே.ஈஸ்வரன் - வினீஷ் வேலாயுதன், தயாரிப்பு - கே.இ.ஞானவேல் ராஜா, கதை, வசனம் - ராஜூ முருகன், இயக்கம் - சலவண ராஜேந்திரன்.

படம் பற்றி நாயகி சுவேதா திரிபாதி பேசும்போது,
1990-களில் நடக்கும் ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் இது. கொடைக்கானலுக்கு சர்க்கஸ் குழுவினர் பயணிக்கும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கொடைக்கானலைச் சேர்ந்த ஒரு இளைஞருக்கும் இடையே காதல் மலர்கிறது. இதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமே மெஹந்தி சர்க்கஸ்” என்று கூறினார்.
படம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வரவிருக்கிறது. #MehandiCircus #SaravanaRajendran #MadhampattyRangaraj #ShwetaTripathi
மெஹந்தி சர்க்கஸ் டிரைலர்:
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "தாதா 87" படத்தில் திருநங்கையாக நடித்த நடிகை ஸ்ரீ பல்லவிக்கு பாராட்டுக்கள் குவிந்த நிலையில், தேசிய விருதுக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SriPallavi
விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான "தாதா 87" திரைப்படம் மார்ச் 1 அன்று வெளியாகியது.
இந்த படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார் கதாநாயகி ஸ்ரீ பல்லவி. அதுவே இப்படத்தின் பலமாகவும் அமைந்தது. இந்திய சினிமா வரலாற்றில் ஆண், பெண் வேடத்திலும், பெண், ஆண் வேடத்திலும் நடித்துள்ளனர், ஆனால் ஒரு பெண் திருநங்கை வேடத்தில் நடித்துள்ளது இதுவே முதல் முறை. ஸ்ரீ பல்லவியின் இந்த துணிச்சலான முடிவுக்கு பலதரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். #SriPallavi
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் `கடாரம் கொண்டான்' படத்தின் பின்னணி வேலைகள் நடந்து வரும் நிலையில், படத்தின் இசை பற்றிய அறிவிப்பை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். #KadaramKondan #ChiyaanVikram
ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இசையமைக்கும் பணிகளில் ஜிப்ரான் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியிருக்கிறார்.
இந்த நிலையில், படத்தின் பின்னணி இசைக்கான பணியை துவங்கிவிட்டதாகவும், பின்னணி வேலைகள் சிறப்பாக உருவாகி வருவதாகவும், படத்தின் முதல் பாடல் வருகிற மே 1-ந் தேதி வெளியாகும் என்றும் ஜிப்ரான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
BGM work mode on 🔥. #KK#KadaramKondan#கடாரம்கொண்டான்@RajeshMSelva@RKFI@tridentartsoffl#Chiyaan@aksharahaasan1@AbiHassan_@GSrinivasReddy2@premnava@SoundharyaRavi1@Muzik247inpic.twitter.com/rZllvLAOKu
— Ghibran (@GhibranOfficial) April 14, 2019
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீநிவாஸ் ஆர்.குதா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற மே இறுதி அல்லது ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #KadaramKondan #ChiyaanVikram






