என் மலர்

    நீங்கள் தேடியது "Mahat"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை".
    • இந்த படத்தில் நடிகர் மஹத் மற்றும் சனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை". நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா

    இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நிதின் சத்யா பேசியதாவது, "இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு பீல் குட் திரைப்படம். இந்த படம் கோவிட் காரணமாக சிறிது தாமதமானது. ஆனால் படத்தில் நடித்த அனைவரும் இந்த படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்த படம் நன்றாக உருவாகி இருக்கிறது. இந்த படத்திற்கு உதவியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள். நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்த படம்" என்று கூறினார்.


    காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா

    இயக்குனர் அரவிந்த் பேசியதாவது, "புது இயக்குனர்களை வைத்து படம் எடுப்பதில் பொருளாதார சிக்கல் இருக்க தான் செய்கிறது. அதை தாண்டி தயாரிப்பாளர் நிதின் சத்யா, ரவீந்தர் தொடர்ந்து புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறார்கள், அதற்கு நன்றிகள். இது தொடர வேண்டும். இந்த படத்தில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் எனது நன்றிகள்" என்று கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இயக்குனர் அரவிந்த இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “காதல் கண்டிசன்ஸ் அப்ளை”.
    • இந்த படத்தில் மஹத் கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் அரவிந்த் இயக்கத்தில் மஹத் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காதல் கண்டிசன்ஸ் அப்ளை". நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் லிப்ரா புரொடக்ஷன் ரவீந்தர் வழங்கும் இந்த படத்தில் சனா மகுல், விவேக் பிரசன்னா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீடு விழா

    இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், நடிகர் மஹத் கூறியதாவது, "இது எனது 16- வது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குனர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன், அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி.


    காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா

    இசையமைப்பாளர் ரமேஷ் இந்த படத்தில் அறிமுகமானது எனக்கு மகிழ்ச்சி. ஒளிப்பதிவாளர், நடிகர்கள் அனைவரும் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். இந்த படம் பொருளாதார சிக்கலில் சிக்கி இருந்த போது, ரவீந்தர் தான் உதவினார். அவருக்கு எனது நன்றிகள். நிதின் சத்யா, ரவீந்தர் போன்ற ஆட்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை. அனைவருக்கும் நன்றிகள்."

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிக்பாஸ் 2 நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் மகத், தன்னுடைய காதலி பிராச்சி மிஸ்ராவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். #Mahat
    மங்காத்தா, ஜில்லா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மகத். இவரும் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவும் காதலித்து வந்தனர். பின்னர் நடிகர் மகத் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நடிகை யாஷிகா மீது காதல் வயப்பட்டார்.

    இதனால், மகத்துக்கும், பிராச்சிக்கும் இடையே காதல் முறிவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த மகத், பிராச்சியை சந்தித்து மீண்டும் காதலை வளர்த்துக் கொண்டார்.



    தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் மகத், தன்னுடைய காதலியான பிராச்சியை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகிறார்கள்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படக்குழுவினர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். #VanthaRajavathaanVaruven #RedCardu
    `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மகத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.



    படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ‘ரெட் கார்டு’ என்ற சிங்கிள் ட்ராக்கை நாளை வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சிம்பு பாடியிருக்கும் இப்பாடலுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கிறார். #VanthaRajavathaanVaruven #RedCardu
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    என்னுடைய படம் வெளியாகும் போது பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம் என்று ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். #STR #Simbu #VanthaRajavathaanVaruven
    `செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

    படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் ரசிகர்களுக்கு சில வேண்டுகோள்களையும் வைத்துள்ளார்.

    அதில், ``வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் ஷூட்டிங் முடிந்து விட்டது. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வருகிறது. தியேட்டரில் போய் படம் பார்க்கும் போது டிக்கெட்களை அதிக பணம் தந்தோ, பிளாக்கிலோ வாங்கி படம் பார்க்க வேண்டாம். தியேட்டரில் என்ன கட்டணம் வசூலிக்கிறார்களோ அதைச் செலுத்தி பார்த்தால் போதும்.



    அதேபோல், படம் ரிலீஸ் அன்று என் மீதுள்ள அன்பைக் காட்டும் விதமாக பிளக்ஸ், கட்-அவுட் வைக்கவோ, பால் அபிஷேகம் செய்யவோ வேண்டாம். அது முக்கியம் கிடையாது. அதற்குப் பதிலாக உங்கள் பெற்றோருக்கு உடை எடுத்துத் தரவும், தம்பி தங்கைகளுக்கு சாக்லேட் போன்றவற்றை வாங்கித்தந்து அதைப் படமெடுத்து இணையத்தில் பகிருங்கள். எனக்கு அது போதும். திரைப்படத்தில் நன்றாக நடித்து ரசிகர்களின் பேரை தான் காப்பாற்றுவேன்.

    எனக்காக இந்த வேண்டுகோளை நீங்கள் செய்ய வேண்டும்” என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    படங்களில் மற்ற ஹீரோக்களுடன் துணை நடிகராக வலம் வந்த மகத், தற்போது சோலோவாக களம் இறங்கி இருக்கிறார். #KettavanuPerEduthaNallavanda #Mahat
    ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

    தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகத் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி இருக்கிறது.



    ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’ என்று தலைப்பு வைத்திருக்கும் இப்படத்தில் மகத்திற்கு ஜோடியாக ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார். பிரபு ராம் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தரன் இசையமைக்கிறார். #KettavanuPerEduthaNallavanda #Mahat
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் காதலிக்கும் அளவிற்கு சென்ற யாஷிகா, இன்னும் அவரை நினைத்து உருகி பேசியிருக்கிறார். #Yashika #Mahat
    இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் நெருக்கமானார். காதலிக்கும் அளவுக்கு போன இந்த நெருக்கம் பிக்பாஸ் முடிந்ததும் முடிந்துபோனது.

    மகத் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்தார். இதுபற்றி இதுவரை பேசாத யாஷிகா இப்போது மனம் திறந்துள்ளார். ‘என்னதான் பக்குவமான பெண் என்றாலும்கூட ரிலே‌ஷன்சிப் என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.

    மனசுக்குள் ஏராளமான அன்பு உள்ளவள். யாருக்காவது வாக்கு கொடுத்துவிட்டால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் கவலைப்பட மாட்டேன்.



    அன்பை வைத்து என்னை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல?’ என்று உருகியுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்தில் மேகா ஆகாஷ், மகத்தை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நடிகர் இணைந்துள்ளார். #Simbu #STR
    பவன் கல்யாண், சமந்தா, பிரணீதா நடிப்பில் வெளியாகி தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘அத்தரண்டிகி தாரேதி’. நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.

    இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. சுந்தர்.சி படத்தை இயக்க சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்கிறார். பிரணீதா வேடத்தில் கேத்தரீன் தெரசா நடிக்கிறார். நதியா நடித்த ஹீரோவின் அத்தை வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிட்டிப்பு கடந்த 17ம் தேதி ஜார்ஜியாவில் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில நாட்கள் பிரேக் விடப்பட்டது. அந்தச் சமயத்தில் தான் ‘பிக் பாஸ்’ பிரபலங்களுடன் இணைந்து தான் நடித்த ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தைப் பார்த்தார் சிம்பு.



    படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்த வாரம் தொடங்கியது. இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நேற்று மகத் இணைந்துள்ளார். அதுபோல் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் இணைந்து நடிகர் மகத் நடித்து வருகிறார். #Simbu #STR #Mahat
    ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடனும், ‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடனும் சேர்ந்து நடித்தவர் மகத். இவர் சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.

    தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் மகத் நடித்து வருகிறார். தற்போது இந்த படப்பிடிப்பின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதில் மகத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.



    சமந்தா, பவன் கல்யாண் இணைந்து தெலுங்கில் நடித்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்ட மகத், மீண்டும் காதலியுடன் இணைந்திருக்கிறார். #Mahat #BiggBoss2
    பிக்பாஸ் 2 வீட்டில் இருந்தபோது நடிகர் மகத், யாஷிகா மீது காதலில் விழுந்தார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மனமுடைந்து காதலை முறித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பிராச்சியை சந்தித்து பேசி சமாதானம் செய்து காதலை புதுப்பித்துவிட்டார் மகத்.

    அந்த பெண்ணும் மகத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் மகத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காத போதே பிராச்சி அவரை மன்னித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவை பார்த்து காதலை சொன்ன மகத் வெளியே வந்ததும் ’யாஷிகா மீது ஈர்ப்பு மட்டுமே ஏற்பட்டது.

    காதலி என்றால் அது பிராச்சி மட்டுமே. யாஷிகாவுடன் ரிலே‌ஷன்ஷிப்பில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் தெரிவிக்க வில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் எனது நெருங்கிய நண்பர் சிம்புதான். நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததை வீடியோக்கள் போட்டுக் காட்டி சுட்டிக் காட்டினார் சிம்பு.



    ஆனால் நான் நேர்மையாக நடந்து கொண்டதை பார்த்து அவர் பெருமைப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது சரி, அங்கு போலியாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சிம்பு சொல்லி அனுப்பி வைத்தார். அவர் சொல்லியபடி தான் நான் நடந்தேன்’ என்று கூறியுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய மகத்தை ந