என் மலர்
சினிமா

மகத்தை நினைத்து உருகும் யாஷிகா
பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் காதலிக்கும் அளவிற்கு சென்ற யாஷிகா, இன்னும் அவரை நினைத்து உருகி பேசியிருக்கிறார். #Yashika #Mahat
இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இவர் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது மகத்துடன் நெருக்கமானார். காதலிக்கும் அளவுக்கு போன இந்த நெருக்கம் பிக்பாஸ் முடிந்ததும் முடிந்துபோனது.
மகத் தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் இணைந்தார். இதுபற்றி இதுவரை பேசாத யாஷிகா இப்போது மனம் திறந்துள்ளார். ‘என்னதான் பக்குவமான பெண் என்றாலும்கூட ரிலேஷன்சிப் என்று வரும் போது நான் ரொம்ப பலவீனமானவள்.
மனசுக்குள் ஏராளமான அன்பு உள்ளவள். யாருக்காவது வாக்கு கொடுத்துவிட்டால் மீற மாட்டேன். இந்த உலகமே எனக்கு எதிராக நின்றாலும் கவலைப்பட மாட்டேன்.

அன்பை வைத்து என்னை எளிதில் ஏமாற்றிவிடுவார்கள். அப்படி ஏமாந்த அனுபவங்கள் நிறைய இருக்கு. ‘உன் நட்பு வட்டத்தைச் சின்னதா வெச்சுக்கோ. யாரையும் சீக்கிரமா நம்பிடாதே’னு அம்மாவும் அப்பாவும் அடிக்கடி சொல்வாங்க. என்னுடைய அந்த அன்புதான் அடுத்தவங்களுக்கான ஆயுதமா இருக்கு. வேற என்ன சொல்ல?’ என்று உருகியுள்ளார்.
Next Story






