என் மலர்
சினிமா செய்திகள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தில் ரஜினிக்கு அசிஸ்டன்டாக யோகி பாபு நடிப்பதாக கூறப்படுகிறது. #Darbar #Rajinikanth
ரஜினியின் 167-வது படமான ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் `தர்பார்’ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
’தர்பார்’ படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

இதில் படப்பிடிப்பு நடைபெறும் இடம் மருத்துவமனை போல உள்ளது. அங்கிருந்து நிவேதா தாமஸ் மற்றும் யோகிபாபு இருவருடன் ரஜினி நடந்து வருகிறார். யோகிபாபுவின் காஸ்டியூம் பார்க்கும்போது, அவர் ரஜினியின் அசிஸ்டன்டாக நடிக்கலாம் என தோன்றுகிறது.
இதற்கிடையே ரஜினிகாந், நயன்தாரா நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்களும் வெளியாகி படக்குழுவுக்கு அதிச்சியை அளித்துள்ளது. #Darbar #Rajinikanth #Nayanthara #YogiBabu
சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் `களவாணி 2' படத்திற்கு நீதிமன்றம் முதலில் தடை விதித்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்கியுள்ளது. #Kalavani2 #Vemal
நடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2'. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.
இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2' திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.சற்குணம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்ளி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். களவாணி 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, களவாணி 2 திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam
தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்த பிடி.உஷாவின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்கும் பணிகளில் இயக்குநர் ரேவதி வர்மா ஈடுபட்டுள்ள நிலையில், அதில் கத்ரீனா கைப் நடிக்கவிருக்கிறார். #PTUsha
தடகள போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்தவர் பிடி.உஷா. கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர் இந்திய விளையாட்டு வரலாற்றில் தவிர்க்க முடியாத வீராங்கனை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 103 பதக்கங்களைக் குவித்துள்ளார்.
இயக்குனர் ரேவதி வர்மா பி.டி.உஷாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கப்போவதாக அறிவித்து இருந்தார்.
அந்த பயோப்பிக்கில் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. பிரியங்கா ஏற்கெனவே குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் பயோபிக் படத்தில் நடித்தார். தற்போது பி.டி.உஷா பயோபிக்கில் கத்ரீனா கைப் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களை இயக்கும் ரேவதி வர்மா சமீபத்தில் மும்பைக்கு சென்று இருக்கிறார். கத்ரீனா கயூபிடம் பி.டி.உஷா பயோபிக்கின் கதையை கூறி இருக்கிறார். கத்ரீனாவுக்கும் கதை பிடித்துவிட்டது. இது பற்றிய அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.
கத்ரீனா தற்போது சூர்யவன்ஷி படத்தில் நடித்து வருவதால் அதன் படப்பிடிப்பு முடிந்ததும் பி.டி.உஷா பயோபிக்கில் அவர் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கத்ரீனா நடிக்கும் முதல் பயோபிக் இது என்பது குறிப்பிடத்தக்கது. #PTUsha #KatrinaKaif
நடிகை ஏமி ஜாக்சனுக்கும் அவரது காதலரான ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட் ஒன்றில் வைத்து திருமணம் நடைபெற இருக்கிறது. #AmyJakcson
ஆர்யாவுடன் `மதராசபட்டினம்‘, விக்ரமுடன் `ஐ’, தனுசுடன் `தங்கமகன்’, ரஜினியுடன் `2.0’ போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். கடந்த ஜனவரி மாதம் ஏமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
இந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமிஜாக்சன் தெரிவித்திருந்தார். அதில் தான் தாய்மை அடைந்திருக்கும் இந்த செய்தியை சத்தம் போட்டு உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற அளவுக்கு சந்தோஷமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஜார்ஜ் பனயிட்டோவும், ஏமி ஜாக்சனும் இணைந்து அவர்களது திருமணத்திற்கான இடத்தை பார்த்து உறுதி செய்துள்ளனர். 2020-ம் ஆண்டு கிரீசில் ஏமி ஜாக்சன் ஜோடி திருமணம் செய்ய உள்ளது. கிரீசில் உள்ள பிரபல ரெஸ்டாரன்டான மிக்கனாஸ் ஐலேண்டில் தான் திருமணம் நடைபெறவிருக்கிறது.
அதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்துவிட்டதாகவும், திருமணத்திற்கு முக்கிய பிரபலங்களை அழைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. #AmyJakcson #GeorgePanayiotou
நடிகர் சிவகார்த்திகேயனை போல் ஸ்ரீகாந்தும் விதிகளை மீறி வாக்களித்துள்ளதாக சென்னையில் நிருபர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். #LokSabhaElections2019 #Srikanth
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவர் வாக்களித்துள்ளார். இதேபோல் நடிகர் ஸ்ரீகாந்த் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாத நிலையில் அவரும் விதிகளை மீறி வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் சாலிகிராமத்தில் காவேரி பள்ளிக்கூடத்தில் வாக்களித்தது தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதிலும் பூத் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவர்களது ஓட்டுகளை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியது யார் என்பதை கண்டுபிடித்து அந்த ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #Srikanth
முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் முன்னோட்டம். #Devarattam #GauthamKarthik
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம்
`தேவராட்டம்'.
கவுதம் கார்த்திக் நாயகனாகவும், மஞ்சிமா மோகன் நாயகியாகவும் நடித்துள்ளனர். சூரி, பெப்சி விஜயன், வேல ராமமூர்த்தி, ராமதாஸ், போஸ் வெங்கட், வினோதினி வைதியநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - சக்தி சரவணன், இசை - நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல், சண்டைப்பயிற்சி - திலீப் சுப்பராயன், நடனம் - பாபா பாஸ்கர், தயாரிப்பு - கே.ஈ.ஞானவேல் ராஜா, எழுத்து, இயக்கம் - முத்தையா.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசும் போது,
என்னுடைய படங்கள் ஜாதியை வைத்து எடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். அப்படியில்லை, உறவுகள் பற்றி தான் நான் படம் எடுத்திருக்கிறேன், ஜாதியை வைத்து படம் எடுக்கவில்லை. எனக்கும் கிராமத்து கதையில் இருந்து நகரத்தில் நடக்கும் ஒரு கதையை படமாக பண்ண வேண்டும் என்று தான் ஆசை. ஆனால், தயாரிப்பாளர்கள் கிராமத்து கதையே கேட்கிறார்கள்.
ஊர் சாயலில் படம் பண்ண வேண்டும் என்றால், அதில் சண்டை, அரிவாள் எல்லாம் வர தான் செய்யும். என்னுடைய அனைத்து படமும் குடும்பம் பற்றி தான் இருக்கும். உறவுகளை வைத்தே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது. பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும் கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம் என்றார்.
படம் வருகிற மே 1-ந் தேதி திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்துள்ளது. #Devarattam #GauthamKarthik #ManjimaMohan
அட்லி இயக்கத்தில் விஜய் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று இளம் நடிகைகள் ஒப்பந்தமாகி உள்ளனர். #Thalapathy63 #Vijay
அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மகளிர் கால்பந்து போட்டியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இதனால் கால்பந்து வீராங்கனைகளாக இளம் நடிகைகள் பலர் படத்தில் இணைந்து வருகின்றனர்.
ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிக்கா ஜான் ஆகியோர் நடித்து வரும் நிலையில் தற்போது 96 படத்தில் விஜய் சேதுபதியுடன் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லம்மா இணைந்துள்ளார். இந்த மாத இறுதி வரை சென்னையில் படப்பிடிப்பை நடத்தும் படக்குழு அதன்பின் டெல்லி செல்ல உள்ளது. டெல்லியில் மே 3-ந் தேதி முதல் படப்பிடிப்பைத் தொடர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளது.

நயன்தாரா தற்போது தர்பார் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில், விரைவில் அவர் இந்தப் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #Thalapathy63 #Vijay #Nayanthara #VarshaBollamma
நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்திருக்கிறேன், மாற்றம் மிக அவசியமானது என்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த விஜய் சேதுபதி கூறினார். #VijaySethupathi
மாற்றம் வரும் என காத்திருக்கிறேன் என்று நடிகர் விஜய் சேதுபதி கூறினார்.
மதுரையில் நடைபெற்ற நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நீண்ட நாட்களுக்கு பின்னர் மதுரைக்கு வந்திருக்கிறேன். மதுரை மக்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: அரசியலுக்கு இளைஞர்கள் வர வேண்டும் என்று நடிகர்கள் கூறுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகள் அதை விரும்பவில்லையே?
பதில்: நான் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்துள்ளேன். இது போன்ற கேள்வி வேண்டாமே.

கேள்வி: தமிழக அரசியலில் மாற்றம் வருமா?
பதில்: நல்லது நடந்தே தீரும் என்ற நம்பிக்கையில் நானும் உங்களைப்போல வாக்களித்து விட்டு காத்திருக்கிறேன். எப்போதும் மாற்றம் வேண்டும். இது மிகவும் அவசியமானது.
மேற்கண்டவாறு அவர் கூறினார். #VijaySethupathi
நடிகை ஸ்ரீதேவியின் முதல் மகள் ஜான்வி கபூர் கடந்த ஆண்டு சினிமாவில் அறிமுகமான நிலையில், இரண்டாவது மகள் குஷி கபூர் விரைவில் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக ஜான்வி தெரிவித்துள்ளார். #KhushiKapoor
நடிகை ஸ்ரீதேவி தனது மூத்த மகள் ஜான்வியை ‘தடக்’ என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். ஆனால் படம் திரைக்கு வரும் முன்பே துபாயில் குளியல் அறை தொட்டியில் மூழ்கி அவர் இறந்து போனார்.
தடக் படத்தில் ஜான்வி நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. மேலும் புதிய படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி விரைவில் இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக தயாராகி வருகிறார்.

இதுகுறித்து ஜான்வி கபூர் கூறியதாவது:-
“குஷி நடிக்க வருவதில் தீவிரமாக இருக்கிறார். இதற்காக நியூயார்க்கில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளார். குஷியை சினிமாவில் அறிமுகப்படுத்துவதில் எனது தந்தை போனிகபூரும் ஆர்வமாக இருக்கிறார். பிரபல இந்தி இயக்குனர் கரண் ஜோகர் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்று குஷி ஆர்வமாக இருக்கிறார்.
சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களின் வாரிசுகளான அலியாபட், சித்தார்த் மல்கோத்ரா, வருன் தவான் உள்ளிட்ட பலரை கரண் ஜோகர் தான் அறிமுகப்படுத்தினார். அவர் மூலம் சினிமாவுக்கு வந்த எல்லோருமே பெரிய இடத்துக்கு போய் இருக்கிறார்கள்.எனவே தான் குஷியும் கரண்ஜோகர் படத்தில் நடிக்க காத்திருக்கிறார்.”
இவ்வாறு ஜான்வி கூறினார். #KhushiKapoor #JhanviKapoor
தனது உதவியாளரை காப்பாற்ற முடியவில்லையே என்று நடிகை சன்னி லியோன் கண்ணீர் விட்டு அழும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. #SunnyLeone
நடிகை சன்னி லியோன் பஞ்சாப்பில் பிறந்து அமெரிக்காவில் நடிகையாக புகழ்பெற்றவர். இப்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி அல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஆனால் அவரை நீலப்பட நடிகை என்றும் இவரது பழைய தொழிலை வைத்தும் கேலியாக பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து சன்னி லியோன் அவ்வப்போது வருத்தம் தெரிவிப்பார்.
சமீபத்தில், நடிகர் அர்பாஸ் கான் இந்தியில் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சமூகவலைதளத்தில் சன்னி லியோன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், துணை நடிகரும். அவரது உதவியாளருமான ஒருவருக்கு உதவி கோரி பகிரப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு எதிர்ப்புகள் எழுந்தன.
இதுகுறித்து நிகழ்ச்சியில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சன்னி லியோன் கூறியதாவது:-
அவர் பெயர் பிரபாகர். என்னுடைய உதவியாளராக இருந்து வந்தார். நான் அந்த பதிவிடும் சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. 20 சதவிகிதம் மட்டுமே அவரது சிறுநீரகம் வேலைசெய்து வந்ததால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்தது.
அவருடைய மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் நானும், என் கணவரும் பார்த்துக்கொண்டோம். நமது நண்பர் அல்லது நம்முடன் வேலைபார்க்கும் ஒருவர் சாகப்போகிறார் எனத் தெரிந்தும் உதவி செய்யாமல் இருந்தால், அது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும்.

பிரபாகரை எனக்கு நன்கு தெரியும். பல ஆண்டுகளாக இந்த துறையில் வேலை பார்த்துவருகிறார். நிறைய பேருக்கு அவரைப் பிடிக்கும். அவருக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது வெறும் மருத்துவமனை கட்டணம் கட்டுவதற்காக அல்ல.
அவருக்கு என்று தனி குடும்பம் இருந்தது. ஒரு மகன் இருந்தான். அவர்களுக்கு உதவ கோரிக்கை வைத்து தான் உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள் என அதை பதிவிட்டேன்.
மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றி நான் கவலைப்படவில்லை. நான் நூறு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரி என அவர்கள் நினைப்பது பற்றி சிந்திக்கவில்லை. என்னை பொறுத்தவரை உங்களை மிகவும் நேசிக்கிற அனைவருக்கும், உங்களை கவனித்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் உதவ வேண்டும்.
பிரபாகர் மிகவும் அமைதியான மனிதர். தான் நோயுற்று இருந்தபோது கூட தனக்காக எந்த உதவியும் அவர் கேட்கவில்லை. அவருக்காக நிறையச் செய்ய வேண்டும் என நினைத்தோம். ஆனால் செய்யவில்லை. நாங்கள் அவரைக் காப்பாற்றத் தவறிவிட்டோம்.
இதை நினைக்கும்போது உண்மையில் மனது வலிக்கிறது. அவரை நாங்கள் நிறையவே மிஸ் செய்கிறோம்.’
இவ்வாறு அவர் கூறினார்.
இதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே கண்ணீர் விட்டு அழுதார். இந்த வீடியோவைப் பார்த்து பலரும் சன்னி லியோனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து பகிர்ந்து வருகின்றனர். #SunnyLeone
இந்தியா மற்றும் உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்காகி இருக்கிறது. #AvengersEndgame
புதிய தமிழ்ப் படங்கள் தியேட்டரில் வெளியாகும் அன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் திருட்டுதனமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறது. இதை தடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை மறுநாள் இந்தியா உள்பட உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படம் இன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆகிவிட்டது. இதனால் 'அவெஞ்சர்ஸ்' படக்குழுவினர் மற்றும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பல கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்தின் வசூல் உலக அளவில் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தை அழைத்து அவரை நெகிழ வைத்திருக்கிறார். #PaRanjith #AnuragKashyap
பாலிவுட் திரைப்பட உலகின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். பல புதிய முயற்சிகளின் மூலம் இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிற முனைப்பில் இருக்கும் அவர், பாலிவுட்டில் அறிமுகம் ஆக இருக்கிற தமிழ் இயக்குனர் பா.இரஞ்சித்தை சந்தித்து பேசியிருக்கிறார்.
சமீபத்தில் 'காலா' 'பரியேறும் பெருமாள்' படங்களை பார்த்த இயக்குனர் அனுராக், இயக்குனர் இரஞ்சித்தை
வரச் சொல்லி விருந்தளித்திருக்கிறார்.
இந்த சந்திப்பில் இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "காலா" திரைப்படம் குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார். அந்த படத்தின் அரசியல், தொழிற்நுட்ப நேர்த்தி ஆகியவை குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார். மேலும் பா.இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படம் குறித்து பேசியவர்,

"இந்திய அளவில் தலித் அரசியலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் துணிச்சலாக பேசக்கூடிய படைப்பாளியான உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்" என்றும் தனது விருப்பத்தினை தெரிவித்திருக்கிறார் அனுராக் காஷ்யப்.
இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த இயக்குனர் பா.இரஞ்சித், "உண்மையிலேயே அவரை சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. காலா, பரியேறும் பெருமாள் குறித்து அவர் பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் சேர்ந்து பணியாற்றுவோம்’ என்றார்.






