என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மான்ஸ்டர்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
    ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ப்ரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.

    பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் டீசர் நாளை வெளியாக இருக்கிறது.


    ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #Monster #SJSuryah #PriyaBhavaniShankar

    தயாரிப்பாளர்களின் அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதோ, பயப்படுவதோ இல்லை, பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புவதாக நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார். #NithyaMenen
    தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்து வருபவர் நித்யா மேனன். தமிழில் கடைசியாக அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடித்திருந்தார்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் தி அயர்ன் லேடி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார்.

    இடையில் என்டிஆரின் வாழ்க்கை படமான ‘கதாநாயகுடு’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது 12 படங்களில் நித்யா மேனன் நடித்து வருகிறார்.

    சமீபத்தில் கேரளாவில் தட்சமயம் ஒரு பெண்குட்டி என்ற படத்தின் படப்பிடிப்பின்போது நித்யா மேனனை சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை அவர் சந்திக்க மறுத்ததாக ஒரு சர்ச்சை எழுந்தது. நித்யா மேனன் திமிர் பிடித்தவர் எனவும், அவரை மலையாள திரையுலகிலிருந்து தடை செய்ய வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் தெரிவித்து வந்தனர்.

    முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் சந்திக்க வந்த தயாரிப்பாளர்களை, தனது சொந்த காரணங்களுக்காக நித்யா மேனன் சந்திக்க மறுத்துவிட்டார். இதை தனிப்பட்ட முறையில் அவமதிப்பாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்கள் நித்யா மேனன் குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவித்து வந்தனர்.



    தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நித்யா மேனன் இந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ‘இந்த சம்பவம் நடைபெற்ற போது தான் எனது தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக தெரியவந்து இருந்தது. அப்போது அவருக்கு புற்றுநோய் மூன்றாம் நிலையை எட்டிஇருந்தது. படப்பிடிப்பின்போதே நான் கேரவனுக்குள் நுழைந்து தாயை நினைத்து அழுதேன். அழுது அழுது ஒற்றைத் தலைவலியாலும் பாதிக்கப்பட்டேன்.

    அந்த சமயத்தில் யாருடனும் பேசும் மனநிலையில் இல்லை. தயாரிப்பாளர்களின் இதுபோன்ற அச்சுறுத்தல்களுக்கு செவிசாய்ப்பதோ பயப்படுவதோ இல்லை. பணியில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்’.

    இவ்வாறு நித்யா மேனன் தெரிவித்துள்ளார். #NithyaMenen

    முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `தேவராட்டம்' படத்தின் விமர்சனம். #Devarattam #GauthamKarthik
    மதுரையில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் பெப்சி விஜயன், ஊரில் பெரிய ரவுடியாக வலம் வருகிறார். தவமிருந்து பெற்ற தனது மகன் மீது தீராத அன்பு கொண்டவர். தனது மகனுக்காக எதையும் செய்யத் துணிந்தவர். இந்த நிலையில், ஒரு பிரச்சனையில் வேல ராமமூர்த்தியை கொன்று விடுகிறார்.

    வேல ராமமூர்த்திக்கு 6 மகள்கள், ஒரே மகன் தான் நாயகன் கவுதம் கார்த்திக். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து தனது அக்காள்களின் வளர்ப்பில் வளர்கிறார்.

    அக்காள்கள் சேர்ந்து கவுதம் கார்த்திக்கை சட்டம் படிக்க வைக்கிறார்கள். தவறு என்று தோன்றினால் தட்டிக் கேட்கும் மனோபாவம் கொண்ட இவரது குணம் பிடித்துப்போக, வழக்கறிஞரான நாயகி மஞ்சிமாவுக்கு கவுதம் கார்த்திக் மீது காதல் வருகிறது. பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.



    இந்த நிலையில், இளம்பெண் விஷயத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் பெப்சி விஜயனின் மகனுக்கும், கவுதம் கார்த்திக்குக்கும் மோதல் ஏற்படுகிறது. தனது மகன் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் தானே களமிறங்கும் பெப்சி விஜயன், கவுதம் கார்த்திக்கின் குடும்பத்தையே அழித்துவிட எண்ணுகிறார்.

    கடைசியில், பெப்சி விஜயனின் ரவுடித்தனத்துக்கு கவுதம் கார்த்திக் எப்படி முட்டுக்கட்டை போடுகிறார்? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தேவராட்டம் கதையின் அடுத்த பாதி.



    இதுவரை பார்க்காத ஒரு துடிப்பான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் கவுதம் கார்த்திக். மதுரை இளைஞனாக, தப்பு என்றால் தட்டிக் கேட்கும் மிடுக்கான தோற்றத்தில் வந்து கலக்குவதுடன், ஆட்டம், பாட்டம், சண்டை என ஒரு ரவுண்டு வந்திருக்கிறார். மஞ்சிமா மோகன் வழக்கறிஞர், காதல் என ரசிக்க வைக்கிறார். சூரி காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்.

    போஸ் வெங்கட் பொறுமையின் உச்சமாகவும், வினோதினி அம்மாவான அக்காவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் பெப்சி விஜயன் வில்லத்தனத்தில் மிரட்ட, வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.



    தென் மாவட்ட ஸ்டைலில் குடும்பம், உறவுகள், பாசம், கோபம் என அனைத்தையும் ஒருங்கே சேர்த்து தனக்கே உரிய பாணியில் இயக்கியிருக்கிறார் முத்தையா. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், பாசப் போராட்டங்களும் இடம்பெற்றிருக்கும் கதையில் மதுரை சாயலில் வரும் பாடல்கள் மண்வாசனையை கூட்ட, ஒரு சில பாடல்கள் படத்தின் போக்கிற்கு இடைஞ்சலாய் வருவது போல் தோன்றுகிறது. திரைக்கதை வேகமாக நகர்ந்தாலும், ரசனையை இன்னமும் கூட்டியிருக்கலாம். பெண்ணின் மீது கை வைத்தால், கருவறுக்க வேண்டும் என்பதை படம் பேசுகிறது.

    நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்க, சக்தி சரவணனின் ஒளிப்பதிவு மதுரை மண்ணை கண்முன் நிறுத்துகின்றன.

    மொத்தத்தில் `தேவராட்டம்' மண்வாசனை. #Devarattam #DevarattamReview #GauthamKarthik #ManjimaMohan

    தர்பார் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள் கசிந்து வரும் நிலையில், அதற்கு படப்பிடிப்பு தளத்தில் கடும் கட்டுப்பாடு விதித்ததால் படக்குழுவுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டனர். #Darbar #Rajinikanth
    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பை நடத்த உள்ளனர். ரஜினிகாந்துடன் நயன்தாரா, யோகிபாபு ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

    ‘தர்பார்’ படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் உடனுக்குடன் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், யோகிபாபு கிரிக்கெட் விளையாடுவது, அதை நயன்தாரா அருகில் நின்று ரசிப்பது போன்ற காட்சிகள் சமீபத்தில் வெளிவந்தன. படப்பிடிப்பு காட்சிகள் உடனுக்குடன் இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பு தரப்புக்கும், இயக்குனருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடுமையான பாதுகாப்புகளையும் மீறி இது மாதிரி படங்கள் வெளிவரக் காரணம் படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என படப்பிடிப்பு குழு கண்டுபிடித்துள்ளது. மும்பையிலுள்ள பிரபலமான கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடக்கிறது. அந்த கல்லூரி மாணவர்கள்தான் ஆர்வமிகுதியில் இப்படி செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.



    இதையடுத்து கல்லூரி மாணவர்களை கட்டுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்லூரியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பை கல்லூரிக்கு வரும் மாணவர்கள் குழுமி இருந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம். தற்போது அப்படி ஒன்று கூடுபவர்களை அவர்களது மொபைலில் படம் எடுக்க விடாமல் தர்பார் செக்யூரிட்டிகள் பார்த்துக் கொண்டனர்.

    இதனால் படக்குழுவினருக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கல்லூரியின் மாடிக்கு சென்ற மாணவர்கள் படப்பிடிப்பை நோக்கி கற்கள் வீசும் அளவுக்கு சென்று இருக்கிறது. இதுகுறித்து தர்பார் படக்குழு கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சமரசம் ஏற்படாவிட்டால் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை மாற்றிவிடலாமா என்ற ஆலோசனையில் முருகதாஸ் ஈடுபட்டுள்ளார். #Darbar #Rajinikanth #Nayanthara

    நடிகர் சிம்புவின் திருமணம் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.ராஜேந்தர், சிம்பு திருமணம் இறைவன் அருளால் விரைவில் நடக்கும் என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender
    இயக்குனர் மற்றும் நடிகர் டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது நெடுநாள் தோழி நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26-ந் தேதி திருமணம் செய்தார்.

    தமிழ்நாட்டின் முக்கியப் பிரமுகர்களை திருமணத்துக்காக டி.ராஜேந்தர் அழைத்திருந்தார். இது தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அரசியல் கேள்விகளுக்கு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பதில் அளிப்பதாக கூறினார்.



    சிம்பு திருமணம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த டி.ராஜேந்தர், ’இந்த கேள்வியை கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார். #STR #TRajender

    `வடசென்னை' படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் `அசுரன்' படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். #Asuran #Dhanush
    தனுஷ் நடிப்பில் `வடசென்னை', `மாரி 2' ஆகிய படங்கள் கடந்த வருடம் திரைக்கு வந்தன. கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா ரிலீஸ் தாமதமாகியிருக்கிறது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தது.

    இந்த நிலையில் துரை செந்தில்குமார் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார். இதில் சினேகாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதனால் அசுரன் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

    இந்த நிலையில் தற்போது மீண்டும் ‘அசுரன்’ படப்பிடிப்பில் தனுஷ் இணைந்துள்ளார். தனது அசுரன் பட தோற்றத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இது இறுதிகட்ட படப்பிடிப்பு என்றும் தெரிவித்து உள்ளார். அவரது தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.


    தனுஷ் வெளியிட்டுள்ள போஸ்டரில் அசுர வேட்டை விரைவில் என்று அறிவித்து உள்ளதால் படப்பிடிப்பு சில வாரங்களில் முடிந்து படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தனுசுடன் மஞ்சு வாரியர், பாலாஜி சக்திவேல், பசுபதி, ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். 

    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். #Asuran #Dhanush #VijaySethupathi

    ஜான்சன் இயக்கத்தில் `ஏ1' படத்தில் நடித்து வரும் சந்தானம் அடுத்ததாக `பூமராங்' பட இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Santhanam #RKannan
    `தில்லுக்கு துட்டு 2' படத்தை தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்ததாக `சர்வர் சுந்தரம்' படம் ரிலீசாக இருக்கிறது. சந்தானம் தற்போது ஜான்சன் இயக்கத்தில் `ஏ1' (அக்யூஸ்ட் நம்பர் 1) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், சந்தானமின் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. `பூமராங்' படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் இந்த படத்தை இயக்குகிறார். ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகும் இதை மசாலா பிக்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கண்ணன் மற்றும் எம்.கே.ஆர்.பி. புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.கே.ராம் பிரசாத் இணைந்து தயாரிக்கின்றனர்.



    இந்த படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் தேர்வு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு வருகிற ஜூலை மாதம் தொடங்குகிறது. படத்தை வருகிற டிசம்பர் 2019-ல் வெளியிட திட்டமிட்டுள்ளனர். #Santhanam #RKannan

    கல்யாண் இயக்கத்தில் ஜோதிகா - ரேவதி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு படத்திற்கு ஜாக்பாட் என்று தலைப்பு வைத்துள்ளனர். #JACKPOT #Jyothika
    `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் அடுத்ததாக ஜோதிகா, ரேவதியை வைத்து புதிய படமொன்றை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது.

    `ஜாக்பாட்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் நேற்று வெளியானது. அதில் ஒரு போஸ்டரில் ஜோதிகாவும், ரேவதியும் போலீஸ் தோற்றத்தில் தோன்றுகின்றனர். ஆக்‌ஷன் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க, விஜய் படத்தொகுப்பை கவனிக்கிறார். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

    ஜோதிகா தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜுடன் இணைந்து நடித்து வருகிறார். இதுதவிர எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். #JACKPOT #Jyothika #Revathi

    வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்த சிம்பு, குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது புதிய தோற்றம் வெளியாகி இருக்கிறது. #STR
    இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், கடந்த 26ந்தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் இல்லத்தில் நடைபெற்றது.

    இவர்களது திருமண வரவேற்பு நேற்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறளரசனும் கடந்த பிப்ரவரி 16-ந்தேதி அவரின் தந்தை முன்னிலையில் இசுலாம் மதத்துக்கு மாறினார்.



    உடல் எடையை குறைப்பதற்காக லண்டனுக்கு சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணம் மற்றும் வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தனது உடலை குறைத்து வந்தார்.

    இந்த நிலையில், குறளரசன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. #STR #Simbu #Maanadu

    நடிகர் விஜய்யும், கத்ரீனா கெய்ப்பும் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்த நிலையில், படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள் பற்றி பேசிய கத்ரீனா, விஜய் தனக்காக பொறுமையுடன் காத்திருப்பதாக கூறினார். #Vijay #KatrinaKaif
    நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பான விளம்பரத்தில் நடித்தார். அதில் அவருடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கெய்ப்பும் நடித்தார். ஊட்டியில் இந்த படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து தற்போது கத்ரீனா பேசியுள்ளார்.

    ஒரு இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ’நடிகர் விஜய் பெரிய நட்சத்திரம். ஆனால் மிக அமைதியானவர். ஊட்டியில் படப்பிடிப்பு முடிந்து நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தோம். நானும் போனில் சாட் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் முன்னே இரண்டு கால்கள் வந்து நின்றன.



    நான் யாரோ நிற்கிறார்கள் என விட்டுவிட்டேன். அவர் யார் என்று பார்க்காமல் போனையே நோண்டிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் ஆகிய பின்பும் அந்தக் கால்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து யார் என்று பார்த்தேன்.

    அப்போதுதான் அது விஜய் எனத் தெரிந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் போனில் பிசியாக இருந்ததால் என்னைத் தொந்தரவு செய்யாமல் அவ்வளவு நேரம் காத்திருந்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. #Vijay #KatrinaKaif

    நடிகை ஓவியா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடிய நிலையில், இந்த விழாவில் நடிகர் ஆரவ்வும் பங்கேற்று ஓவியாவை வாழ்த்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #Oviyaa #Arav
    கடந்த 2017-ம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

    நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் ரசிகர்கள் ஆதரவால் ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அடுத்து காஞ்சனா 3 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக கூறினார் ஓவியா. பின்னர் நண்பர் என்றார். இந்நிலையில் ஆரவ்வுடன் தனது 28-வது பிறந்தநாளை நேற்று ஓவியா கொண்டாடி இருக்கிறார்.



    நள்ளிரவில் ஆரவ், காயத்ரி உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் மத்தியில் பிறந்தநாள் கொண்டாடும் படங்கள் வைரலாகி வருகின்றன. ஆரவ் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘ராஜ பீமா’ திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாடி இருக்கிறார். #Oviyaa #Arav

    பரத் நீலகண்டன் இயக்கத்தில் அருள்நிதி தமிழரசு - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் `கே 13' படத்தின் முன்னோட்டம். #K13 #Arulnidhi #ShraddhaSrinath
    எஸ்.பி.சினிமாஸ் சார்பில் எஸ்.பி.ஷங்கர், சாந்த ப்ரியா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `கே 13'.

    அருள்நிதி - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் காயத்ரி, யோகி பாபு, ரமேஷ் திலக், எருமைசாணி விஜய், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ்., படத்தொகுப்பு - ரூபன், ஒலி வடிவமைப்பு - டி.உதயகுமார், கலை - கமலநாதன், சண்டைப்பயிற்சி - சுதேஷ், நடனம் - அசார், ஆடை வடிவமைப்பு - பிரியங்கா, பிருத்விராஜன் சந்தோஷ், நிர்வாக தயாரிப்பு - சிவக்குமார்.எம்.கே., இணை தயாரிப்பு - கிஷோர் சம்பத் & தீஷாஸ்ரீ, தயாரிப்பு - எஸ்.பி.ஷங்கர் & சாந்த ப்ரியா, எழுத்து, இயக்கம் - பரத் நீலகண்டன்.



    படம் பற்றி நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் பேசும் போது,

    கே 13 என்பது கே பிளாக்கில் 13-ஆம் நம்பர் வீடு. ஆனால் அந்த வீட்டில் என்ன ஸ்பெஷல் என்பது தான் படத்தின் கதை. இது வெறும் அப்பார்ட்மண்ட் பெயர் அல்ல, கதாபாத்திரமாக பிரதிபலிக்கும். இந்த படத்தில் மலர்விழி என்ற கதாபாத்திரத்தில் ஒரு எழுத்தாளராக நடித்திருக்கிறேன். அருள்நிதி கதை உருவாக்குபவராக, படம் இயக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். இது சாதாரணமாக நாம் பார்த்த திரில்லர் படம் போல் இல்லாமல் வித்தியாசமானதாக இருக்கும். படத்தின் டிரைலர் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக அனைவரையும் கவரும்படியாக, ரசிகர்களை யோசிக்க வைக்கும் விதமாக இருப்பது சிறப்பு என்றார்.

    படம் வருகிற மே 3-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #K13 #Arulnidhi #ShraddhaSrinath

    கே 13 படத்தின் டீசர்:

    ×