search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கத்ரீனாவுக்காக காத்திருந்த விஜய்
    X

    கத்ரீனாவுக்காக காத்திருந்த விஜய்

    நடிகர் விஜய்யும், கத்ரீனா கெய்ப்பும் ஒரு விளம்பரத்தில் இணைந்து நடித்த நிலையில், படப்பிடிப்பில் நடந்த சுவாரசியங்கள் பற்றி பேசிய கத்ரீனா, விஜய் தனக்காக பொறுமையுடன் காத்திருப்பதாக கூறினார். #Vijay #KatrinaKaif
    நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு குளிர்பான விளம்பரத்தில் நடித்தார். அதில் அவருடன் பாலிவுட் நடிகை கத்ரீனா கெய்ப்பும் நடித்தார். ஊட்டியில் இந்த படப்பிடிப்பில் நடந்த சுவாரசிய சம்பவங்கள் குறித்து தற்போது கத்ரீனா பேசியுள்ளார்.

    ஒரு இணையதளத்துக்காக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ’நடிகர் விஜய் பெரிய நட்சத்திரம். ஆனால் மிக அமைதியானவர். ஊட்டியில் படப்பிடிப்பு முடிந்து நாங்கள் அனைவரும் அமர்ந்திருந்தோம். நானும் போனில் சாட் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் முன்னே இரண்டு கால்கள் வந்து நின்றன.



    நான் யாரோ நிற்கிறார்கள் என விட்டுவிட்டேன். அவர் யார் என்று பார்க்காமல் போனையே நோண்டிக் கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் ஆகிய பின்பும் அந்தக் கால்கள் அங்கேயே நின்றுகொண்டிருந்தன. சிறிது நேரம் கழித்து யார் என்று பார்த்தேன்.

    அப்போதுதான் அது விஜய் எனத் தெரிந்தது. படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அவர் என்னிடம் குட்பை சொல்வதற்காக வந்திருந்தார். நான் போனில் பிசியாக இருந்ததால் என்னைத் தொந்தரவு செய்யாமல் அவ்வளவு நேரம் காத்திருந்துள்ளார்’ எனக் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியிலும், வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. #Vijay #KatrinaKaif

    Next Story
    ×