என் மலர்
சினிமா செய்திகள்
பெண்களின் ஆதரவு குரலாக புயலில் ஒரு தோணி என்ற புதிய படம் ஜலீல் இயக்கத்தில் உருவாகி வருகிறது. #PuyalilOruThoni
பி.ஜி.பிக்சர்ஸ் சார்பில் ரோமிலா நல்லையா மற்றும் மஜீத் ஆகியோர் தயாரிக்கும் படம் ‘புயலில் ஒரு தோணி’. புதுமுகங்கள் ஸ்ரீசேது, ரேவதி தரண், கோபிகிருஷ்ணன், ரித்திகா ஆகியோர் நடிக்கும் இந்தப்படத்தை ஜலீல் இயக்குகிறார். இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு அழைப்பாளராக தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

“பெண்களுக்கு ஆதரவான ஒரு குரலாக இந்தப்படம் உருவாகிறது” என்கிறார் படத்தின் இயக்குனர் ஜலீல்.
நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மான்ஸ்டர் படத்தில் எலியிடம் சிக்கித் தவிப்பவராக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். #Monster #SJSuryah
‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவை வைத்து ‘மான்ஸ்டர்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இதில் பிரியா பவானி ஷங்கர் நாயகியாக நடித்திருக்கிறார். கருணாகரன் நகைச்சுவை வேடத்தில் நடித்திருக்கிறார்.
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று வெளியானது. எலியால் ஏற்படும் விபரீதமும், எலியிடம் சிக்கித் தவிப்பவராகவும் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.
இந்த டீசர் தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. #Monster #SJSuryah #PriyaBhavaniShankar
முதல் படத்திலேயே அந்தமாதிரி காட்சி கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம் என்று பேரழகி படத்தில் நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத் கூறியிருக்கிறார். #ShilpaManjunath #PerazhagiISO
கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் 'பேரழகி ஐ.எஸ்.ஓ'. 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஷில்பா மஞ்சுநாத் கூறும்போது, ‘காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் ஒப்பந்தமான படம் பேரழகி ஐ.எஸ்.ஓ தான். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் விஜயன் சொன்னபோதே இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று தோன்றியது.

கதைப்படி எனது பாட்டி சச்சு ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதம் என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கேரக்டர் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கேரக்டரோ வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இது எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களுக்குமான காட்சிகள் படமக்கப்பட்டதால் இரண்டு கேரக்டர்களுக்குமான உடைகள், வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால் போகப்போக சரியாகி விட்டது.
இதற்காகவே சச்சும்மா நடிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பை கூர்ந்து கவனித்து வந்தேன். நான் அப்படி கவனித்தேன் என்பது கூட இப்போதுவரை அவருக்கு தெரியாது. இதில் சச்சுவின் இளம்பருவ கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் ‘ரெட்ரோ’ காட்சிகளும் உண்டு. முதல் படத்திலேயே ரெட்ரோ காட்சிகளும் எனக்கு கிடைத்து இன்னொரு அதிர்ஷ்டம் தான். இரண்டு வேடங்கள் தான் என்றாலும் கிட்டத்தட்ட நான்கைந்து விதமான நடிப்பை இதில் கொடுக்க வேண்டி இருந்தது. அதேசமயம் இயக்குனர் விஜயன் கதையை உருவாக்கி இருந்த விதம், அழகாக எனது கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்க உதவியாக இருந்தது” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.
‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இருக்கிறது என்று நடிகர் தினேஷ் கூறியிருக்கிறார். #Dinesh #IrandaamUlagporinKadaisiGundu
‘அட்டகத்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான நடிகர் தினேஷ். தனது இயல்பான நடிப்பின் மூலமாக அனைத்து தரப்பு ரசிகர்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றார்.
இப்படத்தை அடுத்து குக்கூ, விசாரணை, திருடன் போலீஸ், அண்ணனுக்கு ஜே என பல படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அந்த வரிசையில் தற்பொழுது இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து தினேஷ் கூறும்போது, ‘குண்டு படத்தை உலகின் எந்த நிலப்பரப்போடும் தொடர்புபடுத்தினாலும் அது அந்த நிலப்பரப்போடு பொருந்திப்போகும். ஒரு இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. அதே சமயம் ஜனரஞ்சகமான அனைவரும் ரசிக்கும்படியும், குடும்பங்கள், இளைஞர்கள், எல்லோருக்குமான ஒரு படமாக வந்திருக்கிறது. என் சினிமா கேரியரில் ரொம்ப முக்கியமான படம். லாரி ஓட்டுனராக வட தமிழகத்து இளைஞனாக நடித்தது புதிய அனுபவம்.
அடுத்தடுத்து தமிழகம் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் பிற மாநிலங்களில் இருந்து வாய்ப்புகள் வருகின்றன. எனக்கு உகந்த கதைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்றார்.
தமிழில் பிரபுதேவாவுடன் கதாநாயகியாக நடித்த நடிகை அதா சர்மா, திருநங்கை வேடத்தில் நடிக்க இருக்கிறார். #PrabhuDeva #AdahSharma
சிம்புவுடன் ‘இது நம்ம ஆளு’ படத்தில் குத்தாட்டம் போட்டவர் அதா சர்மா. தமிழில் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கு, இந்திப் படங்களில் பிசியானவர் தமிழ் சினிமா பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. இந்நிலையில் அவர் ஆணாக இருந்து திருநங்கையாக மாறுகிற கதாபாத்திரத்தில் இந்தியில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு ‘மேன் டு மேன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. அபிர் சென்குப்தா இயக்கும் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளான தமன்னாவும், ஆண்ட்ரியாவும் ‘தடகா’ என்ற படத்தின் மூலமாக நெருங்கி தோழிகளாக மாறிவிட்டார்கள். #AndreaJeremiah #Tamannaah
ஆங்கிலோ இந்தியன் பெண்ணான ஆண்ட்ரியா ரோமன் கத்தோலிக் குடும்பத்தைச் சேர்ந்தவர், பிறந்தது அரக்கோணம். தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை சென்னையில் தான் முடித்தார்.
கவுதம் வாசுதேவ் மேனனின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்பாகவே, லைலா மற்றும் பிரசன்னா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தில் சிறிய கேரக்டர் ஒன்றில் நடித்திருந்தார். ஆண்ட்ரியாவுக்கு நெருக்கமான தோழியாக தமன்னா மாறி இருக்கிறார்.

தமன்னாவும் இவரும் இணைந்து நடித்த தெலுங்குப் படமான ‘தடகா’ பெரிய வெற்றி பெற்றது. இருவருமே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருப்பவர்கள். இருவரும் ஒரே தேதியில் பிறந்தவர்கள் என்பதும் ஆச்சர்யமான ஒற்றுமை. #AndreaJeremiah #Tamannaah
எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் உருவாகி இருக்கும் `நீயா 2' படத்தின் முன்னோட்டம். #Neeya2 #Jai
ஜம்போ சினிமாஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்துள்ள படம் ‘நீயா 2’.
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி இருக்கிறது. படத்தின் நாயகனாக ஜெய் இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இசை - ஷபிர், ஒளிப்பதிவு - இராஜவேல் மோகன், படத்தொகுப்பு - சௌமி கிருஷ்ணன், கலை - ஐயப்பன், ஸ்டண்ட் - ஸ்டண்ட் ஜிஎன்,
நடனம் - கலா, விஜி, பாடல்கள் - கபிலன், பவன் மித்ரா, மோகன்ராஜ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் - ஆக்சல் மீடியா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - எல்.சுரேஷ்.

இவர் “எத்தன்” படத்தை இயக்கியவர். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது,
இதில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜநாகம் படம் முழுக்க இடம்பெறுகிறது. இதன் தோற்றத்தை முடிவு செய்ய நானும் கேமராமேனும் இந்தியா, தாய்லாந்து நாடுகளில் தேடினோம். இறுதியாக பேங்காக்கில் ஒரு ராஜநாகத்தை பார்த்தோம். அதன் அமைப்பு, உடல்மொழி, தன்மை என அனைத்தையும் பார்த்தும், கேட்டும் தெரிந்து கொண்டோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் விதமாக இதன் காட்சிகள் அமையும். அழுத்தமான காதல் கதையுடன் காமெடி கலந்த ஹாரர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது” என்றார். #Neeya2 #Jai #VaralakshmiSarathkumar #RaaiLakshmi #CatherineTresha
நீயா 2 டிரைலர்:
விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் `இராவண கோட்டம்‘ படத்தில் நடிக்கும் சாந்தனு, விஜய்யுடனான தனது பழக்கம் பற்றி பேசும் போது, ஒருமுறை இரண்டு பேரும் சேர்ந்து நடிப்போம்னு விஜய் சொன்னதாக கூறினார். #Shanthnu
‘மதயானைக் கூட்டம்‘ படத்தின் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்க இருக்கும் படம் `இராவண கோட்டம்‘. இந்த படத்தின் கதாநாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார்.
இந்த படத்துக்காக சாந்தனுவுக்கு விஜய் வாழ்த்து கூறி இருக்கிறார். இது குறித்து சாந்தனு கூறியதாவது:-
‘நான் எப்போதுமே ஒரு படம் ஆரம்பிக்கும்போது விஜய் சாருக்கு போன் பண்ணியோ, மெசேஜ் பண்ணியோ விஷயத்தை சொல்வது வழக்கம். அந்த வகையில்தான் இவர்தான் டைரக்டர், படத்தோட டைட்டில் இதுதான்‘ என்று அனுப்பினேன். `வாழ்த்துகள் நண்பா. டைட்டில் செம்ம..’ என்று பதிலுக்கு செய்தி அனுப்பி இருந்தார்.

அதைத்தான் என்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். கடந்த இரண்டு, மூன்று படங்களில் இருந்து இப்படி அவருக்குத் தெரிவிப்பது என்னுடைய வழக்கம். எப்போதாவது நேரம் கிடைக்கும்போது அவரும், நானும் பேசுவோம். `எப்படி புராஜெக்ட் போயிட்டு இருக்கு, இதை அப்படி பண்ணு, இப்படி பண்ணுனு சொல்லுவார். நல்லது, கெட்டது என நிறைய விஷயங்கள் பேசியிருக்கிறோம்.
அவருடன் இணைந்து நடிக்கணும்னு ஆசை இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சயமாக நடிப்பேன். ஒரு முறை யதேச்சையாப் பேசிட்டு இருக்கும்போது, `சரியான நேரம் வரும்போது இரண்டு பேரும் சேர்ந்து நடிப்போம். சொல்றேன்’னு சொல்லியிருக்கார்’. இவ்வாறு அவர் கூறினார். #Shanthnu #Vijay #RaavanaKottam
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் கதையாக உருவாக இருக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க இருக்கிறார். #ArunVijay #NivethaPethuraj
துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் நரகாசூரன் படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்த படம் ரிலீசாகாமல் தடைபட்டுள்ளது. இந்நிலையில் பார்த்திபன் நடிப்பில் நாடகமேடை என்ற படத்தை இயக்குவதாக கார்த்திக் நரேன் அறிவித்தார்.
அந்த படம் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க தயாராகி உள்ளார். ஆக்ஷன் திரில்லராக இந்த படம் உருவாகிறது.

இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது. #ArunVijay #NivethaPethuraj #KarthickNaren
கிராமத்து பின்னணியில் காமெடி, சென்டிமெண்ட்டுடன் அதிரடி கதை தயாராக இருப்பதாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இயக்குநர் பாண்டிராஜ் பதில் அளித்துள்ளார். #Suriya #Pandiraj
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவர் இயக்குநராக அறிமுகமான பசங்க படம் வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் ஆனது என்ற தகவலை மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிட்டு நேற்று பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவர் கடைசியாக கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியிருந்தார். சூர்யா தயாரித்த இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாண்டிராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.
Pakka
— Pandiraj (@pandiraj_dir) May 1, 2019
Mass
Rural
Action
Comedy
family sentiment
oda oru script Ready aaguthu 🔥😍
இந்த நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பாண்டிராஜ் ஒரு ட்விட் போட்டார். அந்த ட்விட்டை குறிப்பிட்டு, ரசிகர் ஒருவர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கும்படி பாண்டிராஜிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதிலில், பக்கா மாஸாக கிராமத்து சாயலில் அதிரடி, காமெடி, குடும்ப சென்டிமண்ட்டுடன் கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் பாண்டிராஜ் - சூர்யா கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Suriya #Pandiraj
சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மூன்றாவது பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். #Aranmanai3 #SundarC
வெற்றி பெறும் படங்களின் இரண்டாம் பாகங்களை எடுப்பது டிரெண்டாகவே மாறிவிட்டது. ஆனால் அப்படி எடுக்கப்படும் படங்களில் பெரும்பாலான படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வந்தது. அஜித்குமாரின் பில்லா படமும் 2 பாகங்கள் வந்தன. சூர்யாவின் சிங்கம் படத்துக்கு வரவேற்பு இருந்ததால் தொடர்ச்சியாக அந்த படத்தின் 3 பாகங்கள் வந்துள்ளன.
லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படம் வசூல் குவித்ததால் அதன் மூன்றாம் பாகம் இப்போது திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. வேலை இல்லா பட்டதாரி, சண்டக்கோழி உள்ளிட்ட படங்களும் 2 பாகங்கள் வந்தன. தற்போது இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் சுந்தர்.சி இறங்கி உள்ளார். ஏற்கனவே கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர்.சி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது விஷால், தமன்னா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. இந்த படம் முடிந்ததும் அரண்மனை 3-ம் பாகம் தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது. அரண்மனை 2-ம் பாகத்தில் நடித்த திரிஷா, ஹன்சிகா ஆகியோர் 3-ம் பாகத்திலும் நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Aranmanai3 #SundarC
இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில், அவரது ஓட்டை அவர் போடாதது கேள்வி எழுப்பியுள்ளது. #AkshayKumar
மும்பையில் உள்ள 6 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 29-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. அப்போது, இந்தி திரைப்பட நட்சத்திரங்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். பல நட்சத்திரங்கள் தங்களது மை வைத்த விரலை காட்டியபடி உள்ள புகைப்படங்களை வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
ஆனால் பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் வாக்களிக்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவர். சமீபத்தில் பிரதமர் மோடியிடம் அரசியல் சாராத கேள்விகளை கேட்டு பேட்டி கண்டார். ஓட்டுப்போடுவதை ஊக்குவிக்க வேண்டும் என்ற மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஓட்டுரிமையின் மகத்துவம் குறித்து வாக்காளர்களிடம் அக்ஷய் குமார் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கேசரி, டாய்லட் ஏக் பிரேம் கதா, ஏர்லிப்ட் போன்ற படங்களில் அவர் தேசியவாதத்தை வலியுறுத்தும் வகையில் நடித்து இருந்தார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கடமையாற்றாமல் புறக்கணிப்பு செய்த அவரை வலைத்தள நெட்டிசன்கள் கேள்வி கணைகளால் துளைத்து எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மும்பையில் நடந்த ‘பிளாங்’ திரைப்பட சிறப்பு காட்சியின் போது, ஓட்டுப்போடாதது குறித்து அவரிடம் நிருபர்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். ஆனால் அதற்கு பதில் எதுவும் அளிக்காமல் அவர் வேக வேகமாக சென்று விட்டார். அனைவரும் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்த பிரபல நடிகர் ஒருவர் ஜனநாயக கடமையாற்றாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #AkshayKumar #LokSabhaElections2019






