search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maanadu"

    • தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது.
    • விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27-ந் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சக்கணக்கான மக்கள் அந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

    இதனையடுத்து மாநாட்டில் விஜய் பேசி கொண்டிருந்த போது, மேடை அருகில் இருந்த ரசிகர்கள் திடீரென "கடவுளே - அஜித்தே" என கோஷமிட ஆரமித்தனர். இதை சற்றும் எதிர்பாராத விஜய் உடனே பேச்சை நிறுத்தி விட்டு அமைதி அமைதி என்பது போல கையை அசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர். 

    சிம்பு படம் பற்றிய வதந்திக்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். #STR #Simbu #Yuvan
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்கு பிறகு நடிகர் சிம்பு, 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

    இந்நிலையில் சிம்பு பாடியதாக கூறப்படும் பாடல் ஒன்று சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் யுவன் இசையில் 'மாநாடு' படத்துக்காக உருவாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. 



    இதற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பாடல் உண்மை இல்லை. அது என்னுடைய டியூன் இல்லை' என்று பதிலளித்துள்ளார்.
    வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைத்து வந்த சிம்பு, குறளரசன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது புதிய தோற்றம் வெளியாகி இருக்கிறது. #STR
    இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், கடந்த 26ந்தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் இல்லத்தில் நடைபெற்றது.

    இவர்களது திருமண வரவேற்பு நேற்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். தான் காதலித்த பெண் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறளரசனும் கடந்த பிப்ரவரி 16-ந்தேதி அவரின் தந்தை முன்னிலையில் இசுலாம் மதத்துக்கு மாறினார்.



    உடல் எடையை குறைப்பதற்காக லண்டனுக்கு சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணம் மற்றும் வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார். சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தனது உடலை குறைத்து வந்தார்.

    இந்த நிலையில், குறளரசன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. #STR #Simbu #Maanadu

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் மாநாடு படத்தில் கதாநாயகி யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

    ஆனால், தற்போது இப்படத்தில் பிரபல இயக்குனர் பிரியதர்ஷனின் மகள், கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.



    தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9 
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு நடிக்க இருக்கும் புதிய படம் டிராப்பானதாக வந்த தகவலுக்கு தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். #Simbu #STR
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் சிம்புவுடன் ஜெய் நடிக்க இருப்பதாகவும், ஜோடியாக ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

    இப்படம் சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் படப்பிடிப்பு தொடங்காததால் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியானது.



    தற்போது இதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘படம் கைவிடப்பட்டதாக வரும் வதந்திகளை நிறுத்துங்கள். ஒரு படத்தை தொடங்குவது அவ்வளவு சுலபமானது அல்ல. தற்போது படத்தின் முன்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் முழு விவரங்கள் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்’ என்றார். #STR #Maanadu #STRinMaanaadu #VP9 
    வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை தொடர்ந்து, சிம்பு நடிக்க இருக்கும் மாநாடு படத்தில் பிரபல நடிகர் நடிக்க இருக்கிறார். #STR #Maanadu #STRinMaanaadu
    சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதில் சிம்புவுடன் நடிகர் ஜெய் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #Jai
    வந்தா ராஜாவாதான் வருவேன், மாநாடு படங்களை முடித்த பிறகு சிம்பு அடுத்ததாக சீமான் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STR #Seeman
    செக்கச் சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்பு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

    இந்த படத்தை முடித்தபிறகு சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் துவங்கவிருக்கிறது. தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாவது பாகத்திலும் சிம்பு நடிக்கவிருக்கிறார்.



    இந்த நிலையில், சீமான் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போதய சூழலுக்கு ஏற்ப அந்த படம் உருவாகுவதாகவும், இதில் சிம்பு மருத்துவராக நடிப்பதாகவும் கூறப்படும் நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. #STR #Seeman

    சினிமா படங்களுக்கு எழுந்து வரும் பிரச்சனைகளை அன்புமணி ராமதாஸுடன் கேட்கும் கேள்விகளுக்கு நேருக்குநேர் விவாதத்திற்கு தயார் என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார். #STR #Simbu
    ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    அரசியலை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது எஸ்.டி.ஆரின் மாநாடு என்றும், வெங்கட் பிரபுவின் அரசியல் என்றும் வெங்கட் பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு வேகமாக பரவியுள்ளது.

    இதுகுறித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நான் அடுத்ததாக நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தின் தலைப்பு அனைவருக்கும் பிடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது. இந்த கூட்டணி உருவாக வேண்டும் என்று நீண்ட நாளாக ஆசைப்பட்டு வந்தேன். மாநாடு என்று தலைப்பு வைத்ததால் நான் அரசியலுக்கு வருவேன் என்று நினைக்காதீர்கள். ஆனால், படத்தில் அரசியல் இருக்கிறது. 

    பொதுவாக தமிழ் சினிமா படங்களுக்கு நிறைய கருத்து, பிரச்சனைகள் எழுந்து வருகிறது. விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஏன் புகைப்பிடிக்கும் காட்சி வருகிறது என்று பிரச்சனை வந்தது. அங்கிள் அன்புமணி ராமதாஸ் கேட்டிருந்தார். இதப்பற்றி விவாதிக்கும் போது, நான் எதாவது சொல்லி தப்பாகி விடும். இதுபற்றி விவாதம் நடந்தால் கூட நான் பேச தயார் என்று அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே சொல்லியிருந்தார். 



    ஒரு விவாத மேடையில் அங்கிள் அன்புமணி ராமதாஸ் வந்து கேள்வி கேட்டால், சினிமா சார்பாக நான் பேச தயாராக இருக்கிறேன். அதுதான் சிறந்த வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன். எங்கிருந்தாலும் நான் செல்ல தயார். ஏனென்றால் இது போன்ற பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது முற்றுப்புள்ளியாக இருக்கும்’ என்றார்.
    ×