என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலர் படக்குழுவில் இடம்பிடித்து வருகின்றனர். #Darbar
    பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஜத்தின் சர்னா தர்பார் படக்குழுவில் இணைந்துள்ளார்.

    ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜத்தின் சர்னா மிகச்சிறிய வேடமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் பிரதிக் பப்பர் வில்லனாக நடிக்கிறார்.



    காப்பான் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ள சிராக் ஜனியும், ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். கத்தி படத்தில் நீல் நிதின் முகேஷ், துப்பாக்கியில் வித்யுத் ஜம்வால் என ஏ.ஆர்.முருகதாஸ் வித்தியாசமான நடிகர்களை வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தார்.

    இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கில் பல இந்தி நடிகர்கள் படக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணிபுரிகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். #Darbar#Rajinikanth #JithinSarna #PrathikBaber #ChiragJani

    பாலிவுட்டில் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே டென்மார்க் நாட்டை சேர்ந்தவர் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீபிகா விளக்கம் அளித்துள்ளார். #DeepikaPadukone
    இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் இந்தியர் அல்ல டென்மார்க் நாட்டை சேர்ந்தவர். டென்மார்க் பாஸ்போர்ட் தான் வைத்துள்ளார் என்று விமர்சனங்கள் எழுந்தன.

    தீபிகாவின் பெற்றோர்கள் பிரகாஷ் மற்றும் உஜ்ஜாலா படுகோனே இருவரும் டென்மார்க்கில் வசிக்கும்போது தான் தீபிகா பிறந்துள்ளார். ஆனால் தீபிகா பிறந்த சில மாதங்களிலேயே குடும்பத்தினர் பெங்களுருக்கு புலம் பெயர்ந்துவிட்டனர்.

    தீபிகா ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ‘நான் இந்தியா பாஸ்போர்ட் தான் வைத்துள்ளேன். ஒரு இந்தியக் குடிமகன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை’ என்று முன்பே விளக்கம் அளித்தார்.



    ஆனாலும் அவர் மீது தொடர்ந்து வெளிநாட்டவர் சாயம் பூசப்பட்டது.

    இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று நடந்த நான்காம் கட்ட வாக்குப்பதிவின் போது தான் இந்திய குடிமகன் என்பதற்கு அடையாளமாக தனது ஜனநாயக கடமையாக வாக்குப்பதிவு செய்தார்.

    வாக்குப்பதிவு செய்த பின்பு விரலில் மையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ’நான் யார் அல்லது நான் எங்கே இருக்கிறேன் என்பது பற்றி என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னைப் பற்றி பேசிவந்தவர்களுக்கு இனி அந்த சந்தேகம் வேண்டாம். இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். ஜெய்ஹிந்த்’ என்று கூறி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். #DeepikaPadukone

    நடிகர் சூர்யாவின் மகன் தேவ் டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். #Suriya #Dev
    சூர்யா - ஜோதிகா தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும், தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். இவர்கள் இருவருமே பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

    தியா சமீபத்தில் மாநில அளவில் நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்ற தகவல் வெளியாகி சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்தது. தற்போது டெல்லியில் தேசிய அளவில் நடந்த ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் கலந்துகொண்டு தேவ் வெற்றி பெற்றுள்ளார்.



    40 பேர் கலந்துகொண்ட இந்த போட்டியில் தேவுக்கு தண்டர் கேக் பிரிவில் வெற்றி கிடைத்துள்ளது. இந்த போட்டியை காண சூர்யாவும், ஜோதிகாவும் நேரில் சென்று இருந்தார்கள். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி தேவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

    சூர்யா தற்போது என்ஜிகே படத்தை முடித்துவிட்டு, காப்பான், சூரரைப் போற்று படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகாவும் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் படத்தை இயக்கி பிரபலமான ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கி உள்ளது. இதில் ஜோதிகாவின் தம்பியாக கார்த்தி நடிக்கிறார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். #Suriya #Dev

    ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு நடிகர் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றம் மூலம் ரூ.5 லட்சம் வழங்கினார். #GomathiMarimuthu #VijaySethupathi
    ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிகின்றன.

    கோமதி கடும் வறுமையை மீறி வென்றவர் என்ற செய்தி வெளியான பிறகு அரசியல் கட்சிகளும் பிரபலங்களும் போட்டி போட்டு உதவி செய்து வருகிறார்கள். நடிகர் விஜய் சேதுபதி கோமதிக்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி இருக்கிறார்.

    திருச்சி முடிகண்டம் பகுதியில் கோமதி வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்ற விஜய் சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் மற்றும் முக்கிய மாவட்ட தலைவர்கள் கோமதியை சந்தித்து பேசினார்கள். பின்னர் 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள்.



    ஜனநாதன் இயக்கும் லாபம் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதால் விஜய் சேதுபதியால் நேரில் வர முடியவில்லை.

    காசோலை வழங்கிய பின்னர் ரசிக மன்றத்தினர் போனில் கோமதியுடன் விஜய்சேதுபதியை பேசவைத்துள்ளனர். அப்போது விஜய் சேதுபதி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். #GomathiMarimuthu #VijaySethupathi

    என்ஜிகே பட வீழாவில் பேசிய சூர்யா, எனக்கு அவர் மீது தீராத காதல் உண்டு என்று பேசியிருக்கிறார். #NGK #Suriya #NGKAudioLaunch
    என்ஜிகே படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சூர்யா பேசும்போது, ‘செல்வராகவன் ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும் புது படத்திற்கு செல்வதுபோல இருந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பின் தொடர்ச்சி மறுநாள் இருக்காது. செல்வராகவன் இயக்கத்திலும் சரி, டப்பிங்கிலும் நுணுக்கமாக பார்த்து பார்த்து செல்வார். அவருடைய இயக்கத்திலும், எழுத்திலும் எனக்கு தீராத காதல் உண்டு. செல்வாவின் இயக்கத்தில் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறேன்.

    யுவனின் இசையைப் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவருடைய இசை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. 



    சாய்பல்லவி ஒவ்வொரு காட்சி முடிந்தபிறகும் நான் நன்றாக நடித்திருக்கிறேனா? என்று கேட்டு மிகவும் அர்ப்பணிப்புடன் நடித்தார். இதுதவிர, இப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

    எஸ்.ஆர்.பிரபு காலதாமதமானாலும் இப்படத்திற்கு என்ன தேவையோ அதை தேவைப்படும் நேரத்தில் சரியாக செய்துக் கொடுத்தார். என்னுடைய துறையில் இப்படம் ஒரு முக்கியமான படமாக இருக்கும். இப்படத்தின் டப்பிங் பேசி முடித்துவிட்டேன். செல்வராகவன் அடுத்த படம் எடுத்தால் நானே கதாநாயகனாக நடிக்க விருப்பம்’ என்றார். 
    ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘தனுஷ் ராசி நேயர்களே’ படத்தில் மேலும் ஒரு கதாநாயகி இணைந்திருக்கிறார். #HarishKalyan
    ஹரீஷ் கல்யாண் படத்தில் தற்போது ‘தனுஷ் ராசி நேயர்களே’ என்ற படம் உருவாகி வருகிறது. இதில் கதாநாயகியாக ரியா சக்ரவர்த்தி நடிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தற்போது ரெபா மோனிகா ஜான் மற்றொரு கதாநாயகியாக நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, "இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பதாக அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், இயக்குனர் சஞ்சய் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, என்னை தான் மனதில் நினைத்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 



    உண்மையில், நான் இதுவரை செய்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் முற்றிலும் புதியதாக இருக்கும். தனுசு ராசி நேயர்களே குடும்பத்துடன் ரசிக்கும் காதல், நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படம். சஞ்சய் எனக்கு கதையை விளக்கி கூறியபோது அது மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த குழுவில் ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.

    ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

    ரெபா மோனிகா ஜான் இதற்கு முன் தமிழில் ஜெய்க்கு ஜோடியாக ‘ஜருகண்டி’ படத்தில் நடித்துள்ளார்.
    ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமான மீரா ஜாஸ்மினை ரசிகர்கள் மீண்டும் நடிக்க அழைப்பு விடுத்திருக்கிறார்கள். #MeeraJasmine
    ரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின். அனில் ஜான் டைட்டஸ் என்ற பொறியாளரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    அதன் பிறகு கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். படங்களில் கவனம் செலுத்தாமல் உள்ள மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. காரணம் அந்த படத்தில் மீரா ஜாஸ்மின் குண்டாக இருந்தார்.



    இந்நிலையில் தற்போது மலையாள இயக்குநர் அருண் கோபி துபாய்க்கு சென்ற இடத்தில் மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீரா ஒல்லியாக உள்ளார்.

    மீரா ஜாஸ்மினின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார் என்கிறார்கள். சில ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.
    என்ஜிகே படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது என்று நடிகை சாய் பல்லவி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார். #NGK #SaiPallavi
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இதில் சாய் பல்லவி பேசும்போது, ‘கதை கேட்டவுடன் எனக்கு பிடித்தது. படப்பிடிப்பு எனக்கு ஸ்கூல் மாதிரி இருந்தது. லீவு கிடைக்காதா?, மழை பெய்யாதா? என்று ஸ்கூல் மாணவன் போல் நினைத்துக் கொண்டு இருந்தேன். படப்பிடிப்பு தளம் எனக்கு மிகவும் பயமாக இருந்தது. நான் வீட்டில் இருந்து செல்லும் போதே இப்படி நடிக்கனும், அப்படி நடிக்கனும் என்று தயாராக செல்வேன். ஆனால், அங்கு சென்றால் வேற மாதிரி இருக்கும். நான் தயாராக செல்வதுதான் தவறு என்று புரிந்துக் கொண்டேன். 



    இயக்குனர் செல்வராகவனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். என்னை விட சிறப்பாக நடிக்கிறார். சூர்யாவின் மிகப்பெரிய ரசிகை நான். அவர் கூட இருந்து எப்படி பட்டவர் என்று தெரிந்துக் கொண்டேன்’ என்றார்.
    என்.ஜி.கே டிரைலரில் இடம்பெறும் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. #NGK
    செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே'. அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.

    படத்தில் சூர்யா நந்த கோபாலன் குமரன் (என்.ஜி.கே) என்ற பெயரில் நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞாக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 



    இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. இதில் நாட்டுல ஒவ்வொன்னும் ஒருவிதமான பைத்தியம், அவனுக்கு இந்த நாட்டுமேலேயே பைத்தியம் என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
    எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை என்று நடிகை சமீரா ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். #SameeraReddy
    சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமீரா ரெட்டி. அஜித்தின் அசல், விஷாலின் வெடி, மாதவனின் வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    திருமணத்திற்கு பிறகு நடிப்பை நிறுத்திவிட்டார். அவருக்கு நான்கு வயதில் ஹன்ஸ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சமீரா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். இது குறித்து அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:-

    நான் திருமணமாகி இரண்டு மாதங்களில் கர்ப்பமாகிவிட்டேன். பிரசவம் முடிந்த பிறகு மீண்டும் நடிக்க வருவது என்று திட்டமிட்டேன். ஆனால் எல்லாம் நேர் எதிராகிவிடட்டது. கர்ப்ப காலம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.



    நான் முதல் முறை கர்ப்பமாக இருந்தபோது ஏற்பட்ட பிரச்சினையால் 4 முதல் 5 மாதங்கள் படுக்கையில் இருந்தேன். அதனால் உடல் எடை ஏற தொடங்கியது. படங்கள், விருது விழாக்கள் என்று பிசியாக இருந்த எனக்கு படுத்த படுக்கையாக இருந்தது கஷ்டமாக இருந்தது.

    பிரசவம் ஆன பிறகு 102 கிலோ ஆகிவிட்டேன். 32 கிலோ கூடுதல் எடையில் எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை. நான் வெளியே சென்றபோது என்னை பார்த்தவர்கள், சமீரா ரெட்டியா இது, என்ன ஆச்சு என்று வியந்தனர்.

    இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு சிகிச்சை எடுத்தேன். தற்போது நான் மீண்டும் கர்ப்பமாக உள்ளேன். இந்த பிரசவத்தின்போதும் உடல் எடை போடும் என்று தெரியும். எப்பொழுதுமே கவர்ச்சியாக இருக்க முடியாது. அதற்கும் ஒரு முடிவு உண்டு’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி, அடுத்ததாக தெலுங்கு ரசிகர்களை கவரும் விதமாக டோலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். #VijaySethupathi
    விஜய் சேதுபதிக்கு தமிழ் சினிமாவை போலவே மற்ற தென்னிந்திய மொழி சினிமாக்களிலும் ரசிகர் கூட்டம் உருவாகி உள்ளது. இருந்தாலும் அவர் நேரடியாக அந்த மொழி படங்களில் நடிக்காமல் இருந்தார்.

    தற்போது மலையாளத்தில் முதன்முறையாக மார்கோனி மாதாய் படத்தில் நடித்து வரும் அவர் தெலுங்கு திரையுலகில் பிரமாண்டமாக உருவாகும் சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

    சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் அப்படத்தில் நயன்தாரா, அமிதாப் பச்சன், தமன்னா, ஜெகபதி பாபு என முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.



    இந்த படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் மற்றொரு தெலுங்கு படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிரஞ்சீவியின் மருமகன் பன்ஜா வைஷ்னவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தை புச்சி பாபு சனா இயக்குகிறார்.

    ரொமாண்டிக் காமெடியாக உருவாகும் இந்தப் படத்தின் மூலம் மனிஷா ராஜ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
    திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனிஅதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தலைமையிலான அணியினர் நிர்வகித்து வருகின்றனர். இவர்களது பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி என்.சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

    இந்த நியமனத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    ‘தற்போது பதவி வகித்து வருபவர்களின் பதவி காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதையடுத்து சங்கத்தின் வரவுசெலவு கணக்குகளை தாக்கல் செய்து, அவற்றுக்கு ஒப்புதல் பெற வருகிற மே 1-ந்தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தேர்தல் தேதி தீர்மானிக்கப்படும்.

    இந்த சூழ்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு அதிகாரி சேகர் என்பவரை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழக அரசின் வணிகவரித்துறை, பதிவுத்துறை இணைந்து மத்திய பதிவுத்துறை அதிகாரி என்.சேகரை தனி அதிகாரியாக எங்கள் சங்கத்துக்கு நியமித்துள்ளது.



    தயாரிப்பாளர் சங்க நடவடிக்கைகளில் எந்த விதமான முறைகேடும் நடைபெறாத நிலையில், தனி அதிகாரியை நியமித்தது சட்ட விரோதமாகும். எனவே, இந்த நியமனத்தை ரத்து செய்யவேண்டும். நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும்’.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபுவிடம் நடிகர் விஷால் தரப்பு வக்கீல் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை நாளை விசாரிப்பதாக கூறினார்.
    ×