என் மலர்
சினிமா

தர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் இந்தி நடிகர்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறும் நிலையில், பாலிவுட் நடிகர்கள் பலர் படக்குழுவில் இடம்பிடித்து வருகின்றனர். #Darbar
பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தி நடிகர் ஜத்தின் சர்னா தர்பார் படக்குழுவில் இணைந்துள்ளார்.
‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஜத்தின் சர்னா மிகச்சிறிய வேடமாக இருந்தாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல இந்தி நடிகர் பிரதிக் பப்பர் வில்லனாக நடிக்கிறார்.

காப்பான் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ள சிராக் ஜனியும், ‘தர்பார்’ படத்தில் நடித்துள்ளார். கத்தி படத்தில் நீல் நிதின் முகேஷ், துப்பாக்கியில் வித்யுத் ஜம்வால் என ஏ.ஆர்.முருகதாஸ் வித்தியாசமான நடிகர்களை வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்திருந்தார்.
இப்படத்திற்கு அகில இந்திய அளவில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற வேண்டும் என்ற நோக்கில் பல இந்தி நடிகர்கள் படக்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணிபுரிகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். #Darbar#Rajinikanth #JithinSarna #PrathikBaber #ChiragJani
Next Story






