என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா? - சீறும் நிகிலா விமல்
Byமாலை மலர்18 May 2022 11:06 AM GMT (Updated: 18 May 2022 11:12 AM GMT)
மலையாளத்தில் வெளியாக இருக்கும் ஜோ ஜோ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் அசைவம் அரசியல் குறித்து பேசியுள்ளார்.
நடிகை நிகிலா விமல் தமிழில் வெற்றிவேல், பஞ்சுமிட்டாய் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானார். சமீபத்தில் அவர் மலையாளத்தில் நடித்திருக்கும் ஜோ ஜோ என்ற படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிகிலா ஊடகத்திடம் பேசியபோது கூறியதாவது, பசுவை வெட்டக்கூடாது என்பது தற்போது வந்திருக்கும் நடைமுறை. அது ஒரு பிரச்சினை இல்லை. விலங்குகளை வெட்டக்கூடாது என்றால் எந்த விலங்கையும் வெட்டக்கூடாது.
நிகிலா விமல்
பசுவுக்கு என்று தனித்துவமாக எதுவும் இல்லை. வெட்டலாம் என்றால் அனைத்தையும் வெட்டலாம். பசுவை மட்டும் வெட்டக்கூடாது, கோழியை வெட்டலாம் என்றால் அது எந்தவகையில் நியாயம். கோழி பறவையாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்தானே. பசுவுக்கு ஒரு நியாயம் கோழிக்கு ஒரு நியாயமா. அசைவம் சாப்பிடக்கூடாது என்றால் கோழி, மீன் போன்றவைகளையும் சாப்பிடக்கூடாது. முழுமையான சைவமாக மாற வேண்டும். நான் அனைத்து வகை உணவுகளையும் சாப்பிடுவேன். ஒன்றை மட்டும் சாப்பிடக்கூடாது என்றால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
Next Story
×