என் மலர்

  சினிமா செய்திகள்

  ஷங்கர்
  X
  ஷங்கர்

  கேஜிஎஃப்-2 படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேஜிஎஃப்-2 படத்தின் மூலம் பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு இயக்குநர் ஷங்கர் நன்றி தெரிவித்துள்ளார்.
  தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’ . முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் உருவாக்கி இருந்தார். இப்படத்தில் யஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்நிலையில் நவீன முறையில் கதை, திரைக்கதை, படத்தொகுப்பை கொடுத்து மகிழ்வித்துள்ளதாக கேஜிஎஃப் 2 படக்குழுவை இயக்குநர் ஷங்கர் பாராட்டியுள்ளார். 

  ஷங்கர்
  ஷங்கர்

  படத்தை பார்த்துவிட்டு சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், அதிரடி காட்சிகளில் வரும் வசனங்கள் ரசிக்க வைத்துள்ளதாகவும், யாஷ் மாஸாக நடித்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். "பெரியப்பா" வசனம் வரும் காட்சியை குறிப்பிட்டு கூறியுள்ள ஷங்கர், பிரம்மாண்ட படைப்பை கொடுத்ததற்காக பிரசாந்த் நீல்க்கு நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவு சகோதரர்களையும் ஷங்கர் பாராட்டியுள்ளார்.


  Next Story
  ×