என் மலர்

  சினிமா செய்திகள்

  தனுஷ் - வாத்தி
  X
  தனுஷ் - வாத்தி

  போஸ்டருடன் தனுஷ் பட அப்டேட் கொடுத்த படக்குழு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷின் போஸ்டர் குறித்து படக்குழு சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
  செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடியாக தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'சார்' என்றும், தமிழில் 'வாத்தி' என்றும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 

  தனுஷ் - வாத்தி
  தனுஷ் - வாத்தி

  தனுஷ் திரையுலகிற்கு அறிமுகமாகி 20ஆண்டுகளை கடந்துள்ளார். இதனை ரசிகர்களும் திரைத்துறையினரும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தனுஷ் நீண்ட அறிக்கை ஒன்றை அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தனுஷிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'வாத்தி' படக்குழு போஸ்டர் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தனுஷ் தன் முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் பள்ளி மாணவனாக நடித்திருந்த புகைப்படத்தையும் தற்போது பள்ளி ஆசிரியராக நடித்து வரும் 'வாத்தி' படத்தின் புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்து, 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
  Next Story
  ×