என் மலர்
சினிமா செய்திகள்

ஜெய்
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் ஜெய் படம்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் கடைசியாக வெளியான வீரபாண்டியபுரம் படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது ஜெய்யின் அடுத்த ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் குற்றம் குற்றமே. கொலை குற்றத்தை மையப்படுத்தி கிராமத்து பாணியில் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இந்த படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குக்கு பதிலாக நேரடியாக கலைஞர் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.
இதில், ஜெய் ஜோடியாக திவ்யா துரைசாமியும், ஸ்மிருதி வெங்கட்டும் நடித்துள்ளனர். பாரதிராஜா, ஹரிஷ் உத்தமன், அருள்தாஸ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவில், அஜீஸ் இசையில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் படம் உருவாகி இருக்கிறது.
நெற்றிக்கண் திறப்பினும் "குற்றம் குற்றமே" #KalaingarTVPremiere April 14 | 10.30 AM#KuttramKuttrame@Dir_Susi@Actor_Jai@DCompanyOffl@AxessFilm@offBharathiraja@Dili_AFF@DuraiKv@harishuthaman@dhivya_dhurai@ajesh_ashok@thinkmusicindia@teamaimpr@decofflpic.twitter.com/OQuvB2v7p0
— Kalaignar TV (@kalaignartv_off) April 8, 2022
Next Story