என் மலர்

  சினிமா செய்திகள்

  எல்லி அவுரம்
  X
  எல்லி அவுரம்

  தனுஷுடன் இணைந்த ஸ்வீடன் நடிகை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை நடித்து வருவதாக கூறப்படுகிறது.
  இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் நாயகியாக இந்துஜா நடிக்கிறார். 

  எல்லி அவுரம்
  எல்லி அவுரம்

  சமீபத்தில் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தில் எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. பலரும் எதிர்ப்பார்த்திருக்கும் இப்படத்தில் ஸ்வீடன் நாட்டு நடிகை இணைந்திருக்கும் தகவலை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் போஸ்டரை தனுஷ் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இதனை எல்லி அவுரம் அவருடைய வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருள்ளார். இதன்மூலம் இப்படத்தில் இவர் நடித்து வருவது உறுதியாகியுள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


  Next Story
  ×