search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கோப்ரா
    X
    கோப்ரா

    கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது

    விக்ரம் நடிப்பில் ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் கோப்ரா படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
    டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. 

    அஜய் ஞானமுத்து - விக்ரம்
    அஜய் ஞானமுத்து - விக்ரம்


    இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் ஒருவர் எல்லா படமும் வெளியாகி வருகிறது. கோப்ரா படம் எப்போது வெளியாகும் என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து," 'கோப்ரா' படத்தை மே 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி கோப்ரா திரைப்படம் அறிவித்தப்படி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


    Next Story
    ×