என் மலர்

  சினிமா செய்திகள்

  அஜய் ஞானமுத்து
  X
  அஜய் ஞானமுத்து

  கோப்ரா படக்குழு புகைப்படங்களை பகிர்ந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' படத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மற்றும் பலரின் புகைப்படங்களை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.
  டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் போன்ற பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

  படப்பிடிப்பில் இர்பான் பதான்
  படப்பிடிப்பில் இர்பான் பதான்

  இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, கேரளா, ரஷ்யா போன்ற இடங்களில் நடந்து வந்தது. விக்ரம் கிட்டத்தட்ட 20க்கும் மேற்ப்பட்ட தோற்றங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விக்ரம் தனக்கான காட்சிகளை நடித்து முடித்த நிலையில் இர்பான் பதான் அவருக்கான காட்சிகளை நடித்து முடித்துள்ளார். இதனை அப்படத்தின் இயக்குனர் ஆர்.அஜய் ஞானமுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த்துள்ளார். அதில், “இர்பான் பதான் சாரின் இறுதி நாள் படப்பிடிப்பு, உங்களைப் போன்ற அன்பான நபருடன்பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. இது ஒரு மறக்கமுடியாத பயணம்" என்று பதிவிட்டுள்ளார்.  

  ரோஷன் மேத்யுடன் அஜய் ஞானமுத்து
  ரோஷன் மேத்யுடன் அஜய் ஞானமுத்து

  இதனுடன் இப்படத்தில் நடித்த மலையாள நடிகர் ரோஷன் மேத்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து நெகிழ்ச்சியான சில விஷயங்களையும் பகிர்ந்துள்ளார்.
  Next Story
  ×