என் மலர்

  சினிமா செய்திகள்

  பார்த்திபன்
  X
  பார்த்திபன்

  ஆஸ்கர் வின்னர்களுடன் இணையும் இயக்குனர் பார்த்திபன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் பிரபல இயக்குனருடன் ஆஸ்கர் வின்னர்கள் இணைந்திருக்கின்றனர்.
  1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இவர் இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்தார். சென்ற ஆண்டுக்கான தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

  இரவின் நிழல்
  இரவின் நிழல்

  தற்போது இப்படத்தை குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆஸ்கர் நாயகர்கள் சிலர் இப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான 'வ்ஹிப்லஸ்' என்ற படத்திற்காக சிறந்த சவுண்ட் டிசைனுக்கான ஆஸ்கர் விருதை பெற்ற கிரைக் மானும், 2016-ஆம் ஆண்டு அறிவியல் மற்றும் தொழிநுபாட்டிற்கான ஆஸ்கர் விருதை கட்டா லங்கோ லியோனும் பெற்றிருந்தனர். இந்த இருவரும் தற்போது பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் படத்தில் இணைந்துள்ளனர். இதற்குமுன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இப்படத்தில் இணைந்திருந்ததால், மூன்று ஆஸ்கர் நாயகன் இப்படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
  Next Story
  ×