என் மலர்

  சினிமா செய்திகள்

  அஜித் - ஷாலினி
  X
  அஜித் - ஷாலினி

  அது போலி... நம்பாதீங்க... ஷாலினி அஜித் தரப்பில் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் புதிதாக ஒரு டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டது, இதுதொடர்பாக அஜித் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  பெரும்பாலான சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம் அறிவிப்புகளையும் அவர்களுடைய ரசிகர்களுடன் உரையாடல்களையும் நகிழ்த்துவர். இதன் மூலம் ரசிகர்களை எளிதில் தொடர்புகொள்ள முடிவதால் பல நடிகர் நடிகைகள் சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகையும், அஜித்தின் மனைவியுமான ஷாலினி பெயரில் நேற்று ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டது. மேலும் அந்த கணக்கில் ஷாலினி புதியதாக தொடங்கப்பட்ட டுவிட்டர் கணக்கு என்று பதியப்பட்டிருந்தது.

  அஜித் ஷாலினி
  அஜித் ஷாலினி

  இந்த பதிவை கண்டு அவருடைய ரசிகர்களும் நடிகர் நடிகைகளும் அந்த கணக்கை பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்றும் அதனை யாரும் பின் தொடர வேண்டாம் என்றும் அஜித் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பதிவில், "ஷாலினி அஜித்க்குமார் என்ற பெயரில் போலி ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் நடிகை ஷாலினி, டுவிட்டரில் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

  இதற்கு முன் நடிகர் அஜித்குமார் சமூக வலைதளங்களில் இருந்து விலகி விட்டார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமே சமூக வலைதளங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×