என் மலர்

  சினிமா செய்திகள்

  விஜய் ஆண்டனி
  X
  விஜய் ஆண்டனி

  ரத்தம் படத்தின் பாடல் பணிகள் தொடங்கியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் பணிகள் தொடங்கியது.
   ‘தமிழ்படம்’ மூலம் பிரபலமானவர், டைரக்டர் அமுதன். இவரது இயக்கத்தில், ஒரு புதிய படம் தயாராகிறது. இந்தப் படத்துக்கு, ‘ரத்தம்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிகளாக மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகிய மூன்று பேரும் நடிக்கிறார்கள். 

  அமுதன் - அறிவு
  அமுதன் - அறிவு

  அரசியல் திகில் படமாக உருவாகி வரும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர். இன்பினிடி பிலிம் வென்சர்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் பாடல் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை படத்தின் இயக்குனர் அமுதன் அவருடைய வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். பாடகர் தெருக்குரல் அறிவுடன் அவர் கலந்துரையாடியதை நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 


  Next Story
  ×