search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    மாளவிகா மோகனன்
    X
    மாளவிகா மோகனன்

    மாலத்தீவில் பிகினி உடையில் வலம் வரும் பிரபல நடிகை

    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர், மாலத்தீவில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.
    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். 

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் ‘மாறன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    மாளவிகா மோகனன்
    மாளவிகா மோகனன்

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது மாலத்தீவுக்கு சென்றிருக்கும் மாளவிகா மோகனன், அங்கு பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் பல லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.
    Next Story
    ×