என் மலர்

  சினிமா செய்திகள்

  நிதிஷ் பரத்வாஜ்
  X
  நிதிஷ் பரத்வாஜ்

  விவாகரத்து என்பது மரணத்தை விட கொடுமையானது - பிரபல நடிகர் குமுறல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து அதிகரித்து வருகிறது அந்த வகையில் பிரபல நடிகர் அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
  ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்தும், மகாபாரத தொடரில் ஸ்ரீகிருஷ்ணராக நடித்து பிரபலமடைந்தவர் நிதிஷ் பரத்வாஜ். இவர் ஸ்ரீகிருஷ்ணராகவே பலராலும் அறியப்பட்டவர். இவருக்கும், மோனிஷா பாட்டீல் என்பவருக்கும் 1991-ல் திருமணம் நடந்து 2005-ல் இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் 2009-ம் ஆண்டு ஸ்மிதா கேட் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இப்போது 2-வது மனைவியையும் விவாகரத்து செய்து விட்டதாக அவர் அறிவித்துள்ளார்.

  நிதிஷ் பரத்வாஜ் கூறும்போது, மனைவியை நான் விவாகரத்து செய்துவிட்டேன். விவாகரத்து செய்வது என்பது மரணத்தைவிட வலியை தரக்கூடியது'' என்று கூறியுள்ளார்.

  ஸ்மிதா கேட்வுடன் நிதிஷ் பரத்வாஜ்
  ஸ்மிதா கேட்வுடன் நிதிஷ் பரத்வாஜ்

  ஏற்கனவே இந்தி நடிகர் அமீர்கானும் மனைவியை விவாகரத்து செய்தார். நடிகை அமலாபால் விவாகரத்து செய்து பிரிந்தார். சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவும் கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்து கொண்டார். இரு தினங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்திருந்தனர். சமீபகாலமாக நடிகர்-நடிகைகள் அடுத்தடுத்து விவாகரத்து செய்து வருவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
  Next Story
  ×