search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விக்ரம், பா.இரஞ்சித்
    X
    விக்ரம், பா.இரஞ்சித்

    பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம்?

    ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் பா.இரஞ்சித் அடுத்ததாக ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார்.
    இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பா.இரஞ்சித், அட்டகத்தி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் இயக்கிய மெட்ராஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் ரஜினியை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். 

    சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்கிற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பா.இரஞ்சித்
    பா.இரஞ்சித்

    இந்நிலையில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்கு பின்னர் இயக்குனர் பா.இரஞ்சித், நடிகர் விக்ரமுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×