search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஹன்சிகா
    X
    ஹன்சிகா

    முழு படத்தையும் ஒரே வாரத்தில் நடித்து முடித்த ஹன்சிகா

    ஹன்சிகா நடித்துள்ள திரில்லர் படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
    நடிகை ஹன்சிகா நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘105 மினிட்ஸ்’. இப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தை ராஜா துஷ்ஷா இயக்கி உள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, கொரியா, சீனா போன்ற மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். நடிகை ஹன்சிகா, ஒரு வாரத்தில் முழு படத்திலும் நடித்து முடித்துவிட்டாராம். 

    ஹன்சிகா

    இதுதவிர தமிழில் உருவாகி உள்ள மஹா படத்திலும் நடித்து முடித்துள்ளார் ஹன்சிகா, இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதில் நடிகர் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இது நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×