search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷ்
    X
    தனுஷ்

    தனுஷுக்கு ஜோடியாகும் 2 இளம் நடிகைகள்

    நடிகர் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாகவும், இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் 5-ந் தேது தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் மாறன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துள்ள நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு பிறகு மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகும் ‘டி44’ படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். 

    நடிகர் தனுஷ் ஏற்கனவே மித்ரன் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன்’, ‘குட்டி’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.  தற்போது நான்காவது முறையாக தனுஷ் - மித்ரன் கூட்டணி இணையவுள்ளது. இப்படத்திற்கு தனுஷ்தான் கதை, திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியுள்ளார் என கூறப்படுகிறது. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

    இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிந்துவிடும் என்பதால் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் டி44 படத்தின் படப்பிடிப்பை தொடங்க மித்ரன் ஜவஹர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

    ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர்

    ஏற்கனவே ஹன்சிகா ஒரு கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மற்ற 2 கதாநாயகிகள் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளாக உள்ள ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இப்படத்தில் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×