என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘கோமாளி’ இயக்குனருடன் கூட்டணியா? - விக்ரம் தரப்பு விளக்கம்
Byமாலை மலர்28 July 2021 7:20 AM GMT (Updated: 28 July 2021 9:32 AM GMT)
நடிகர் விக்ரமின் 61-வது படத்தை ‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் கைவசம் கோப்ரா, துருவ நட்சத்திரம், சீயான் 60, பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் உள்ளன். இதில் கோப்ரா, துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘சீயான் 60’, மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
விக்ரம்
இதனிடையே நடிகர் விக்ரமின் 61-வது படத்தை ‘கோமாளி’ பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், நடிகர் விக்ரம் தரப்பு இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்த பின்னரே அடுத்த படத்தின் இயக்குனரை விக்ரம் தேர்வு செய்வார் எனக்கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
Next Story
×