என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
‘நவரசா’ ஆந்தாலஜியில் இடம்பெறும் 9 குறும்படங்களின் பெயர் என்ன?... நடிப்பது யார்? - முழு விவரம்
Byமாலை மலர்8 July 2021 6:30 AM GMT (Updated: 8 July 2021 6:30 AM GMT)
9 இயக்குனர்கள் இயக்கி உள்ள நவரசா ஆந்தாலஜி தொடர், நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி இருக்கிறது. நவரசங்களை அடிப்படையாக கொண்டு உருவாகி உள்ள இந்த ஆந்தாலஜி தொடரை 9 இயக்குனர்கள் இயக்கி உள்ளனர். இதனை மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த வெப் தொடரில் இடம்பெறும் 9 குறும்படங்களின் தலைப்பு மற்றும் அதில் யார் யார் பணியாற்றி உள்ளார்கள் என்பது குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதனை இந்த தொகுப்பில் காணலாம்.
சூர்யா, ப்ரயாகா
கிட்டார் கம்பி மேலே நின்று
'காதல்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'கிட்டார் கம்பி மேலே நின்று' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கவுதம் மேனன் இயக்கியுள்ளார். சூர்யா, ப்ரயாகா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
பிராஜக்ட் அக்னி
'ஆச்சரியம்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'பிராஜக்ட் அக்னி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
விஜய் சேதுபதி
எதிரி
'கருணை' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு ‘எதிரி’ என பெயரிடப்பட்டு உள்ளது. பிஜாய் நம்பியார் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
ரெளத்திரம்
'கோபம்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'ரெளத்திரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி இயக்கியுள்ளார். ரித்விகா, ஸ்ரீராம், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
பீஸ்
'அமைதி' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'பீஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். கவுதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
யோகிபாபு
சம்மர் ஆப் 92
'காமெடி' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'சம்மர் ஆப் 92' எனப் பெயரிடப்பட்டுள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
துணிந்த பின்
'தைரியம்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'துணிந்த பின்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. சர்ஜுன் இயக்கியுள்ளார். அதர்வா, அஞ்சலி, கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
சித்தார்த், பார்வதி
இன்மை
'பயம்' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'இன்மை' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார். சித்தார்த், பார்வதி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
பாயசம்
'அருவருப்பு' மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த குறும்படத்துக்கு 'பாயசம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. வஸந்த் சாய் இயக்கியுள்ளார். டெல்லி கணேஷ், ரோகினி, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X