search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஏலே, மண்டேலா பட போஸ்டர்கள்
    X
    ஏலே, மண்டேலா பட போஸ்டர்கள்

    ‘ஏலே’ பட பாணியில் வெளியாகும் ‘மண்டேலா’?

    மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘மண்டேலா’ திரைப்படம், ஏலே பட பாணியில் வெளியாக உள்ளதாம்.
    சில்லுகருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா ஷமீம், அடுத்ததாக இயக்கிய படம் ஏலே. சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் நடித்திருந்த இப்படத்தை நேற்று நேரடியாக டி.வி.யில் ஒளிபரப்பினர். திரையரங்க உரிமையாளர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தயாரிப்பு தரப்பு இந்த அதிரடி முடிவை எடுத்தது. 

    இந்நிலையில், ஏலே படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் அடுத்ததாக தயாரித்து வரும் மண்டேலா படமும் இதே பாணியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. யோகிபாபு நாயகனாக நடித்துள்ள இப்படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

    யோகிபாபு

    இப்படத்தையும் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற மார்ச் மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் மாதத்தில் 'மண்டேலா' திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
    Next Story
    ×