search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஜேம்ஸ்பாண்டு 007 படத்தில் பெண் கதாபாத்திரம் இல்லை - தயாரிப்பாளர் அறிவிப்பு
    X

    ஜேம்ஸ்பாண்டு 007 படத்தில் பெண் கதாபாத்திரம் இல்லை - தயாரிப்பாளர் அறிவிப்பு

    ஹாலிவுட்டில் பிரபலமான ‘ஜேம்ஸ்பாண்டு 007’ படத்தில் பெண் துப்பறிவாளர் கதாபாத்திரம் இருப்பதாக வெளியான தகவலுக்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். #JamesBond007 #BarbaraBroccoli
    ஹாலிவுட் திரையுலகில் ‘ஜேம்ஸ் பாண்டு 007’ படத்துக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உண்டு. அதில் ஜேம்ஸ்பாண்டு 007 கதாபாத்திரம் துப்பறியும் நிபுணராக சித்தரிக்கப்படுகிறார்.

    இதுவரை அந்த கதாபாத்திரத்தில் நடிகர் மட்டுமே நடித்து வந்தார். அது போன்று லேடி ஜேம்ஸ்பாண்டு 007 கதாபாத்திரத்தில் நடிகையை நடிக்க வைக்கலாம் என்ற கருத்து நிலவியது.

    தயாரிப்பாளர் பார்பரா புரோக்கோலி என்பவர் ஜேம்ஸ் பாண்டு 007 கதாபாத்திரத்துடன் கூடிய சினிமா படம் தயாரிக்க இருக்கிறார். அதில் பெண் ஜேம்ஸ்பாண்டு 007 கதாபாத்திரம் இடம்பெறும் என்று பரவலான கருத்து நிலவியது.

    இது குறித்து இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு அவர் பேட்டிஅளித்தார். அதில் பெண் ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரம் இல்லை. படத்தில் ஆண் ஜேம்ஸ்பாண்டு மட்டுமே இருப்பார். ஆணுக்கு பதிலாக பெண் ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என நாங்கள் விரும்பவில்லை.



    அதே நேரத்தில் ஜேம்ஸ் பாண்டுக்கு நிகராக முக்கியத்துவம் தரும் பெண் கதாபாத்திரங்கள் உருவாக்கப்படும். உலகம் தற்போது மாறி வருகிறது. டேனியல் கிரேக் நடித்த ஜேம்ஸ்பாண்டு படங்களில் கூட பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    எனவே ஜேம்ஸ்பாண்டு கதாபாத்திரத்துக்கு ஆண் தான் சரியாக இருப்பார். அப்படி இருக்கையில் அந்த கதாபாத்திரத்துக்கு பெண்ணை ஏன் திணிக்க வேண்டும் என்றார். #JamesBond007 #BarbaraBroccoli

    Next Story
    ×