search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார்கள் - தனுஸ்ரீ தத்தா
    X

    ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார்கள் - தனுஸ்ரீ தத்தா

    ஹீரோ முன் ஆடைகளை களைந்து நடனமாடு என கூறியதாக இயக்குனர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா புகார் கூறி உள்ளார். #TanushreeDutta
    தமிழில் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தனுஸ்ரீ தத்தா. இவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசும்போது இந்தி நடிகர் நானா படேகர் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஆச்சாரியா ஆகியோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 

    அவர் கூறும்போது, ‘‘2008–ம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தில் நடித்தபோது நானா படேகர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதை வெளியே சொல்லக்கூடாது என்று அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டினார்கள். என் குடும்பத்தினருடன் சென்றபோது தாக்கினார்கள். 

    நானா படேகர் பெண்களை மதிப்பது இல்லை. சில நடிகைகளை அடித்து இருக்கிறார். என்னைப்போல் பல புதுமுக நடிகைகள் இதுபோன்ற தொல்லைகளை சந்தித்துக்கொண்டு பொறுமையாக இருக்கிறார்கள்’’ என்றார். ரஜினிகாந்த் போன்ற பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் நானா படேகரை நடிக்க வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

    இதனை ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படத்தில் நடன இயக்குனராக பணியாற்றியவரும், தமிழில் ஜீவாவின் ரவுத்திரம் படத்தில் நடித்தவருமான கணேஷ் ஆச்சாரியா மறுத்துள்ளார். 

    இந்த நிலையில் நேற்று டிஎன்ஏ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அப்போது தனுஸ்ரீ தனது முதல் படமான 'சாக்லேட்: டீப் டார்க் சீக்ரெட்ஸ்' (2005) பிரத்தியேகமாக பேசினார். அந்த படத்தில் அவருடன் அனில் கபூர், சுனில் ஷெட்டி, இர்பான் கான், இம்ரான் ஹஷ்மி ஆகியோரும் நடித்து இருந்தனர். தனுஸ்ரீ படப்பிடிப்பின் போது எனக்கு நடந்த மிகவும் விரும்பத்தகாத சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.



    அவர் கூறியதாவது:-

    இயக்குனர் (விவேக் அக்னிஹோத்ரி) வெளிப்படையாக என்னிடம் கேட்டார். உனது ஆடைகளை களைந்து நடனம் ஆடு ('கப்டே உத்தர் கே நாச்சோ) என என்னிடம் கூறினார். நான் கலங்கி போனேன், ஆனால் இர்பான் ஜென்டில்மேன் அவர் உடனடியாக இயக்குனரை நிறுத்துமாறு கூறினார். இயக்குனர் எப்படி நடந்துகொள்வார் என்பது அவருக்குத் தெரியும் என்றும் அவருக்கு யாரும் அறிவுரை கூற தேவையில்லை என்றும் கூறினார். சுனில் ஷெட்டியும் டைரக்டரிடம் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

    அந்த இயக்குனர் இர்பானுக்கு சாதாகமாக செயல்பட கூறினார். இது ஒரு நடிகரின் குளோசப் ஷாட். இது என் ஷாட் கூட இல்லை. நான் கூட ஷாட்டில் இருக்க போவதில்லை. அப்போது தான் நடிகருக்கு எதிரில் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார். அந்த ஆண் நடிகர் இயக்குனரிடம் 'அவளது உடம்பையும் நடனத்தையும் காணவேண்டிய அவசியம் தேவை இல்லை என கூறவேண்டி இருந்தது, இது தான் இர்ஃபான் கான். நான் உண்மையில் அவரை பாராட்டினேன் அது அவரது குளோசப் ஷாட். நான் பிரேமில் இல்லை.

    அவருக்கு குளோசப் ஷாட்டில் முகபாவம் வர நான் அவர் முன் ஆடைகளை களைந்து நடனமாட கூறினார். இதனால் தான் நான் அதிர்ச்சி அடைந்தேன். நடிகர் திகிலடைந்தார். இயக்குனரிடம், 'நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? நான் என் குளோசப் முகபாவத்தை காட்டுகிறேன். அது எனது நடிப்பு என கூறினார். சுனில் ஷெட்டியும் இது குறித்து பேசினார். தொழிலில் நல்லவர்கள் இருக்கிறார்கள்.  இர்பான் கான் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் எனக்காக பேசினர் என கூறினார்.
    Next Story
    ×