என் மலர்

  சினிமா

  மஞ்சுஷா
  X
  மஞ்சுஷா

  லாரி மோதிய விபத்தில் சினிமா பாடகி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயமடைந்த சினிமா பாடகி மஞ்சுஷா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். #ManjushaMohandas
  திருவனந்தபுரம்:

  கொச்சி அருகே பெரும்பாவூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுஷா (வயது 26). பின்னணி பாடகியான இவர் மலையாள சினிமாவில் பல பாடல்களை பாடி உள்ளார். 2009-ம் ஆண்டு முதல் சினிமாவில் பாடி வந்தார்.

  இவரது கணவர் பிரியதர்‌ஷன்லால் சவுதி அரேபியாவில் தொழில் அதிபராக உள்ளார். இந்த தம்பதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

  மேலும் மஞ்சுஷா, காலடி பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 27-ந்தேதி தனது மகளை உறவினரின் பராமரிப்பில் விட்டுவிட்டு மஞ்சுஷா மொபட்டில் கல்லூரிக்கு சென்றார். அவருடன் சக மாணவியான அஞ்சனா என்பவரும் சென்றார்.

  வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றதும் எதிரில் வந்த லாரி ஒன்று ஸ்கூட்டர் மீது மோதியது. இந்த விபத்தில் மஞ்சுஷாவும், அஞ்சனாவும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

  அவர்கள் இருவரையும் அக்கம், பக்கத்தினர் காப்பாற்றி பெரும்பாவூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்பிறகு மஞ்சுஷா மேல் சிகிச்சைக்காக கொச்சி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் இறந்து விட்டார்.

  இதுபற்றி பெரும்பாவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #ManjushaMohandas #manjusha
  Next Story
  ×