என் மலர்

  சினிமா

  பிரபாஸ் ரசிகர்களுடன் மோதிய சித்தார்த்
  X

  பிரபாஸ் ரசிகர்களுடன் மோதிய சித்தார்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாய்ஸ் படம் மூலம் பிரபலமான சித்தார்த், பாகுபலி நடிகர் பிரபாஸின் ரசிகர்களுடன் ட்விட்டரில் மோதலில் ஈடுபட்டுள்ளார். #Siddharth #Prabhas
  நடிகர் சித்தார்த் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு சர்ச்சையாக எழுதுபவர். சமீபத்தில் ‘பாகுபலி’ புகழ் பிரபாசுக்கு அவரது ரசிகர்கள் ஹேஸ்டேக் ஒன்றை உருவாக்கினார்கள்.

  பிரபாசுக்கு இன்னும் 100 நாட்களில் பிறந்தநாள் வரவிருக்கிறது. அதற்கு இப்போதே தயாரான அவரின் ரசிகர்கள் அதற்காக ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.

  இதை பார்த்த சித்தார்த் பிரபாசின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை பகிர்ந்தார். இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரபாசைக் கிண்டல் செய்வதைப் போல நடிகர் விஜய்யையோ, அஜித்தையோ சொல்ல முடியுமா என சிலர் கேட்டனர்.

  அதற்குப் பதிலளித்த சித்தார்த், “இது வெறும் நகைச்சுவைக்காகப் போட்ட பதிவுதான். நகைச்சுவையை நகைச்சுவையாகவே கருத வேண்டும்” என்று பதில் அளித்து இருக்கிறார்.
  Next Story
  ×