என் மலர்

  சினிமா

  ஜீவாவின் திடீர் முடிவு - கலக்கத்தில் ரசிகர்கள்
  X

  ஜீவாவின் திடீர் முடிவு - கலக்கத்தில் ரசிகர்கள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கீ, ஜிப்சி, கொரில்லா ஆகிய படங்களில் பிசியாக நடித்து வரும் ஜீவாவின் திடீர் முடிவால் ரசிகர்கள் கலக்கத்தில் இருக்கிறார்கள். #Jiiva
  ஜீவா நடித்த கீ படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அவர் கையில் ஜிப்சி, கொரில்லா என 2 படங்கள் உள்ளது. தனது சினிமா வாழ்க்கை பற்றி ஒரு பேட்டியில் கூறிய ஜீவா, என்னை மற்ற ஹீரோக்களுடன் ஒப்பிட விரும்பவில்லை.

  காதல், ஆக்‌‌ஷன், சென்டிமென்ட், கருத்து சொல்லும் படம் என்று எல்லாவிதமான படங்களும் பண்ணி இருக்கிறேன். அதில் பல நல்ல படங்களும் இருக்கு என்று நம்புகிறேன்.

  நான் பெரிய நட்சத்திரம் கிடையாது. அதே நேரத்தில் மோசமான படங்கள் பண்ணும் நடிகரும் கிடையாது. இப்போதைய சூழலில் நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் தேவையில்லை. ஓப்பனிங் காட்டுவதற்கும், பால், கூழ் ஊத்துறதுக்கும், சில நல்ல வி‌ஷயங்களை பண்ணுவதற்கும் ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்துகிறார்கள். அதை இனி பண்ணமுடியாது.  இது டிஜிட்டல் உலகம். ரசிகர் மன்றங்கள் எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் காணாமல் போய்விடும். எனக்கு 34 வயது ஆகிவிட்டது. இன்னும் ஆறேழு வருடங்கள் சினிமாவில் நல்லவிதமாக இருந்துவிட்டு ஓய்வு ஆனாலும் ஆகிவிடுவேன். இப்பவே என்னைக் கலாய்க்கிறார்கள். 40 வயதுக்குப் பிறகு நான் ஹீரோயின்கூட ஆடிக்கிட்டு இருந்தா இன்னும் மோசமா கலாய்ப்பார்கள்’ என்று கூறி இருக்கிறார்.
  Next Story
  ×