என் மலர்

  சினிமா

  தாய்லாந்து நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாதவன் மகன்
  X

  தாய்லாந்து நீச்சல் போட்டியில் பதக்கம் வென்ற மாதவன் மகன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்துக் கொண்ட நடிகர் மாதவனின் மகன் பதக்கம் வென்றுள்ளார். #Madhavan #Vedaant
  தமிழ் மற்றும் இந்தியில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் நடிப்புக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தற்போது இவரது மகனுக்கு ரசிகர்கள் அதிகமாகி வருகிறார்கள். 

  தாய்லாந்து நாட்டில் பாங்காக் நகரில், தாய்லாந்து ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் கலந்து கொண்டுள்ளார்.

  இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட வேதாந்த் மாதவன் 1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இதை வேதாந்தின் தந்தையான நடிகர் மாதவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.  ‘தாய்லாந்தில் நடந்த 2018-ம் ஆண்டுக்கான தாய்லாந்து ஏஜ் குரூப் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் எனது மகன் வேதாந்த் இந்தியாவின் சார்பில் பங்கேற்று வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். நாட்டுக்காக வேதாந்த் வென்றுள்ள முதல் பதக்கம் இதுவாகும். இதை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவருக்கும் நன்றி, உங்களின் ஆசிகள் என் மகனுக்கு தேவை’ எனப் பதிவிட்டுள்ளார்.

  மாதவனின் மகன் வேதாந்த்துக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். 
  Next Story
  ×