என் மலர்

  சினிமா

  மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்ற தாடி பாலாஜி
  X

  மூக்குப்பொடி சித்தரிடம் ஆசி பெற்ற தாடி பாலாஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி, திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார்.
  பிரபல நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி. டி.வி. நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்கிறார். போலீசில் புகார் உள்ளிட்ட பிரச்சினைகளையும் சந்தித்து வந்தார்.

  இந்த நிலையில் குடும்ப பிரச்சினையில் இருந்து விடுபடுவதற்காக தாடி பாலாஜி திருவண்ணாமலையில் உள்ள மூக்குபொடி சித்தரை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக அவர் திருவண்ணாமலை சென்றார்.

  அங்கு டீக்கடையில் வைத்து மூக்குப்பொடி சித்தரை தாடி பாலாஜி சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர் அண்ணாமலையாரை போய் பார்க்குமாறு கூறியுள்ளார்.

  மூக்குபொடி சித்தரை சந்தித்த பிறகு தாடி பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

  குடும்ப பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்காக மூக்குப்பொடி சித்தரை சந்தித்தேன். டி.டி.வி.தினகரனுக்கு அரசியலில் பல பிரச்சினைகள் இருந்தன. அவர் மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்ற பிறகு பிரச்சினைகள் விலகின. தேர்தலிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

  எனவே எனது பிரச்சினைகள் விலகுவதற்காக மூக்குப்பொடி சித்தரை சந்தித்து ஆசி பெற்றேன்.

  இவ்வாறு அவர் கூறினார். 
  Next Story
  ×