என் மலர்

  சினிமா

  சசிகுமார் ஜோடியாகும் ஹன்சிகா?
  X

  சசிகுமார் ஜோடியாகும் ஹன்சிகா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படத்தில் ஹன்சிகா ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
  சசிகுமார் அடுத்ததாக ‘குட்டிபுலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்கு ‘கொடி வீரன்’ என்று தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் கதாநாயகி தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியாக ஹன்சிகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுவரை அறிமுக நாயகிகள், ஒன்றிரண்டு படங்களில் நடித்த நாயகிகள்தான் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஆனால், முதன்முறையாக ஒரு பிரபல ஹீரோயினுடன் ஜோடி சேர்ந்து சசிகுமார் நடிக்கவுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வானதும் அடுத்தக்கட்டமாக விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர். இந்த மாத இறுதியில் கிட்டத்தட்ட படப்பிடிப்பை தொடங்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கம்பெனி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சசிகுமாரே தயாரிக்கிறார்.

  Next Story
  ×