search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    மும்பை போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக்கொண்டதே: குஷ்பு வருத்தம்
    X

    மும்பை போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக்கொண்டதே: குஷ்பு வருத்தம்

    சட்டசபையில் நடந்த நிகழ்வுகளுக்கு குஷ்பு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதை கீழே விரிவாக பார்ப்போம்.
    தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக முதல்வராக சசிகலா ஆதரவு பெற்ற எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றுள்ளார். இதுகுறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியுமான குஷ்பு தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, நான் இன்றைக்குத்தான் நம்ம சென்னைக்கு வந்தேன். நான் ஊருக்கு போய்விட்டு வருவதற்குள் தமிழ்நாடு மாபியா கேங்கிடம் சிக்கிக் கொண்டதே என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறும்போது, இதை நினைத்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. தமிழ்நாட்டின் இப்போதை நிலை மிகவும் வருத்தத்தை கொடுத்துள்ளது. இன்றைய காலை சந்தோஷமாக அமையவில்லை என்று கூறினார்.

    குஷ்பு அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி, சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×