search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித்தால் அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி
    X

    அஜித்தால் அமெரிக்கா செல்லும் அப்புக்குட்டி

    அப்புக்குட்டி என்கிற சிவபாலன் தற்போது அஜித்தால் அமெரிக்கா செல்லவிருக்கிறார். அதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்...
    சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த  ‘வெண்ணிலா கபடி குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அப்புக்குட்டி. ‘அழகர்சாமியின் குதிரை’ படத்திற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில், அஜித்துடன் ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

    தொடர்ந்து கிராமத்து வேடங்களில், ஒரே பாணியில் நடித்துக் கொண்டிருந்த அப்புக்குட்டியின் திறமையை உணர்ந்த அஜித், அவருக்காக தனியாக போட்டோஷுட் ஒன்றை நடத்தி, அவரை விதவிதமான கோணங்களில் படம் பிடித்து அவர் சினிமாவில் அடுத்தகட்டத்துக்கு உயர உதவியாக இருந்தார்.

    இந்நிலையில், தற்போது அஜித் - சிறுத்தை சிவா இணைந்திருக்கும் புதிய படத்தில் அப்புக்குட்டி நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னையில் படமாக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அப்புக்குட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளை அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளதாக படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து கூறப்படுகிறது. இதற்காக விரைவில் அப்புக்குட்டி அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அஜித் நடிக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட உள்ளது. இப்படத்தின் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. 
    Next Story
    ×