search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி
    X

    உலகம் முழுவதிலும் வசூலில் தனி வரலாறு படைத்த கபாலி

    உலகம் முழுவதும் கபாலி எத்தனை கோடிகளை வசூலித்தது என்பது குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. அதுகுறித்து கீழே பாப்போம்...
    ரஜினி நடிப்பில் உருவான கபாலி படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. இதுவரை உலக சினிமாவிலேயே இல்லாத அளவுக்கு மிகவும் ஆர்ப்பாட்டமான ஆரம்த்துடன் வெளியான ‘கபாலி’ வெளிநாடுகளில் நடந்த பிரிமீயர் காட்சிகளில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது.

    இந்நிலையில், முதல் நாளில் உலகமெங்கும் இப்படம் எவ்வளவு தொகையை வசூல் செய்துள்ளது என்ற விவரங்கள் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதிலும் இப்படம் ரூ.104 கோடி வசூல் செய்து புதிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இப்படம் முதலில் ரூ.40 கோடியை வசூலித்ததாக கூறப்பட்டது. தற்போது ரூ.58 கோடிகள் வரை இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.24.8 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. ஒரேநாளில் உலகம் முழுவதும் ரூ.104 கோடி வரை குவித்துள்ள ‘கபாலி’ படத்தின் சாதனையை இதுவரை எந்த படமும் செய்யவில்லை. இனிமேலும், இப்படியொரு சாதனையை வேறு எந்த இந்திய படமாவது நிகழ்த்துமா? என்பதும் கேள்விக்குறிதான். 
    Next Story
    ×