என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆட்டோமொபைல்
X
டிரையம்ப் டேடோனா மோட்டோ - 2 765
Byமாலை மலர்5 Sep 2019 7:33 AM GMT (Updated: 5 Sep 2019 7:33 AM GMT)
மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப், தனது டேடோனா மாடலில் புதிய ரகத்தை லிமிடெட் எடிஷனாக அறிமுகம் செய்துள்ளது. ‘டேடோனா மோட்டோ -2 765’ என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்த பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிரையம்ப், தனது பிரபல மாடலான டேடோனா மாடலில் புதிய ரகத்தை லிமிடெட் எடிஷனாக அறிமுகம் செய்துள்ளது. ‘டேடோனா மோட்டோ -2 765’ என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. மொத்தமே 1,530 மோட்டார் சைக்கிள் மட்டுமே இந்தப் பிரிவில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டோ-2 ரேஸ் பைக் பிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள இந்நிறுவனத்தின் 675 மாடலைப் போன்ற தோற்றத்துடன் இது காட்சியளித்தாலும், இதில் பல மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக வாகனத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் அதேவேளையில், எடையைக் குறைப்பதற்காக இதன் பிரேம் முழுவதும் கார்பனால் உருவாக்கப்படுகிறது.
இது 130 ஹெச்.பி. திறனை 12,250 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தக்கூடியது. அதேசமயம் 80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 9,750 ஆர்.பி.எம். வேகத்தில் வெளிப்படுத்தும். இதில் முழுவதும் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான சஸ்பென்ஷன் உள்ளது.
அத்துடன் பிரெம்போ ஸ்டைலெமா டிஸ்க் பிரேக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டேடோனா மோட்டார் சைக்கிள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் தயாரிக்கப்படுவதால், இந்தியாவில் இதை இறக்குமதி செய்வது குறித்து இந்நிறுவனம் பரிசீலித்து வருகிறது. இதன் விலை ரூ.20 லட்சத்துக்குள் இருக்கலாம் என்று ஆட்டோமொபைல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Next Story
×