தொழில்நுட்பம்

இந்தியாவில் மோட்டோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு

Published On 2019-06-15 04:13 GMT   |   Update On 2019-06-15 04:13 GMT
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



மோட்டோரோலா நிறுவனம் ஒன் பவர் ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனினை இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. பின் இந்த ஆண்டு மோட்டோ ஜி7, மோட்டோ ஜி7 பவர் மற்றும் மோட்டோரோலா ஒன் போன்ற ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது.

இந்நிலையில், மோட்டோரோலா தனது ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகபட்சம் ரூ.3000 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி மோட்டோ ஜி7 ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.14,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 



இதேபோன்று மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மோட்டோரோலா ஒன் பவர் மற்றும் மோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி மோட்டோரோலா ஒன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போன் ரூ.15,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாற்றப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுள்ளது. இதே விலை ஆஃப்லைன் சந்தைகளிலும் மாற்றப்பட்டுள்ளது.

விலை குறைப்பு தவிர மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் தனது மோட்டோரோலா ஒன் விஷன் ஸ்மார்ட்போனினை அடுத்த வாரம் அறிமுகம் செய்ய இருக்கிறது.
Tags:    

Similar News